பீகார்: கைக்குழந்தை மீது கொள்ளை வழக்கு
பாட்னா:பீகார் மாநிலத்தில் பிறந்து 3 மாதமே ஆன கைக் குழந்தை மீது கொள்ளை வழக்குப் பதிவு செய்து பெரும்பரபரப்பை ஏற்படுத்தியள்ளது பீகார் காவல்துறை.
பீகார் மாநிலம் சாபர்பூர் மாவட்டம் மினாபூர் காவல் நிலையத்தில்தான் இந்த கூத்தோ கூத்து நடந்துள்ளது.சமீபத்தில் இந்த மாவட்டத்தில் பேருந்தை வழிமறித்து கொள்ளைச் சம்பவம் நடந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக நெகர்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சசிகாந்த் ராய், பப்பு குமார் ஆகியோர் மீதுபோலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக மினாபூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கைதயார் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், சசி காந்த் ராயின் 3 மாத கைக்குழந்தையான பிரவீன் குமாரின் பெயரையும் சேர்த்துள்ளனர்.
இதனால் அங்கு சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரத்னா சஞ்சயிடம் புகார்அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விசாரணை முடிந்தவுடன்கைக்குழந்தையின் பெயர் நீக்கப்படும் எனவும் சஞ்சய் கூறியுள்ளார்.
பீகார் என்றாலே காமெடிதான் போல!












Click it and Unblock the Notifications