துப்பாக்கி பிடிக்கத் தெரியாத இளவரசர் வில்லியம்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:ராணுவப் பயிற்சியின் போது துப்பாக்கியை சரியாக பிடிக்காமல் கீழே நழுவ விட்டதற்காக இளவரசர் வில்லியக்குமேலதிகாரிகள் டோஸ் கொடுத்தனர்.
இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியினரின் மகன் இளவரசர் வில்லியம். தற்போது ராணுவப் பயிற்சியில்சேர்ந்துள்ளார். 24 வயதாகும் வில்லியம், துப்பாக்கி சுடும் பயிற்சியில் வெள்ளிக்கிழமை காலை ஈடுபட்டிருந்தார்.
அப்போது சரியாக துப்பாக்கியைப் பிடிக்காததால் அது நழுவி கீழே விழுந்தது. இதையடுத்து உயர் அதிகாரிகள்வில்லியமை கடுமையாக கண்டித்துள்ளனர். இதுகுறித்து லண்டனிலிருந்து வெளியாகும் டெய்லி மெயில் செய்திவெளியிட்டுள்ளது.
வில்லியமின் ராணுவப் பயிற்சியில் இது ஒரு கரும்புள்ளியாக அமைந்திருக்கிறது. இதன் மூலம் சிறந்த வீரர் என்றவிருதினைப் பெறும் வாய்ப்பைக் கூட அவர் இழக்க நேரிடலாம் என்றும் அந்த செய்தி கூறுகிறது.












Click it and Unblock the Notifications