இன்று சென்னை வரும் மன்மோகன்-சோனியா
சென்னை:பிரதமர் மன்மோகன் சிங் 2 நாள் பயணமாக இன்று இரவு சென்னை வருகிறார். இதையொட்டி சென்னைநகரிலும், பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கும் வரலாறு காணாத பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் இரவு 9.15 மணிக்கு தனி விமானம் சென்னை வருகிறார். சனிக்கிழமை மாலை வரைஅவர் சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
சனிக்கிழமை காலை ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஓரகடத்தில் நிறுவப்படவுள்ள மத்திய தேசிய வாகன சோதனைஆய்வு மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதில் முதல்வர் கருணாநிதியும் பங்கேற்கிறார்.
அதன் பின்னர் ராஜீவ் காந்தி நினைவிடம் செல்லும் மன்மோகன் சிங் அங்கு அஞ்சலி செலுத்துகிறார். பின்னர்நோக்கியா செல்போன் நிறுவனத்தை சுற்றிப் பார்க்கிறார். ராஜீவ் காந்தி பயிற்சி மையத்தையும் அவர்பார்வையிடுகிறார்.
அதன் பின்னர் பிளக்ஸ்ட்ரானிக்ஸ் தொழில்நுட்ப் பூங்காவை அவர் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளில்காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோரும்கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் டெல்லி திரும்புகிறார் பிரதமர்.
திருவனந்தபுரத்திற்கு மன்மோகன் சிங் வந்தபோது பாதுகாப்பில் பெரும் குளறுபடி ஏற்பட்டு சர்ச்சை எழுந்தது.எனவே பிரதமரின் சென்னை வருகையின்போது இதுபோன்ற குழப்பங்கள் ஏற்பட்டு விடாதபடிக்கு பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் மொத்தம் 10,000 போலீஸார்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பிரதமர் செல்லும் வழியில் உள்ள பாலங்கள், உயரமான கட்டடங்கள் உள்ளிட்ட இடங்களில் கூடுதல்கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் இன்று இரவு தங்கும் ஆளுநர் மாளிகை வளாகத்திலும்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications