பவாருக்கு அவமதிப்பு-ஆஸி வீரர்களிடம் விசாரணை
மெல்போர்ன்:மும்பையில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி கோப்பை பரிசளிப்பு விழாவின்போது மத்தியஅமைச்சரும், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவருமான சரத் பவாரை ஆஸ்திரேலியவீரர்கள் ரிக்கி பாண்டிங் மற்றும் டேமியின் மார்ட்டின் ஆகியோர் அவமரியாதைசெய்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்அறிவித்துள்ளது.
சாம்பியின்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு நடந்தபரிசளிப்பு நிகழ்ச்சியின்போது சரத் பவார் வெற்றிக் கோப்பையை வழங்க மேடையில்காத்திருந்தார். அப்போது ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், சரத் பவாரைவிரலால் சுண்டிக் கூப்பிட்டு தன்னிடம் வந்து கோப்பையைத் தருமாறு கூறினார்.இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர் பவார் நின்றிருந்த இடத்திற்கு வந்து பாண்டிங் கோப்பையைப் பெற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கோப்பையுடன்புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கத் தயாராகினர். அப்போது இன்னொரு வீரரானமார்ட்டின், சரத் பவாரை தோள்பட்டையைப் பிடித்து தள்ளி விடாத குறையாகஅங்கிருந்து நகருமாறு வற்புறுத்தினார்.
ஆஸ்திரேலிய வீரர்களின் இந்த செயல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.ஆஸ்திரேலிய வீரர்களின் செயல் மிகவும் கண்டனத்துக்குரியது என்று சச்சின்டெண்டுல்கர், மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்க், முன்னாள் கேப்டன் சுனில்கவாஸ்கர் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இதை பெரிய சர்ச்சையாக்க விரும்பவில்லை என்று சரத் பவாரும்,இந்திய கிரிக்கெட் வாரியமும் அறிவித்துள்ளன. இந் நிலையில் ஆஸ்திரேலியவீரர்களின் செயல் குறித்து விசாரணை நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவுசெய்துள்ளது.
இதுகுறித்து வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் பீட்டர் யங் மெல்போர்னில்செய்தியாளர்களிடம் பேசுகையில், பரிசளிப்பு விழாவின்போது என்ன நடந்ததுஎன்பது குறித்து வீடியோ காட்சிகளைப் பார்க்க முடிவு செய்துள்ளோம். இன்னும் ஓரிருநாட்களில் இதுகுறித்து வீரர்களிடம் விசாரணை நடத்தப்படும்.
முேதல் முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றுள்ளமகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், மகிழ்ச்சி காரணமாக இதுபோல ஆஸ்திரேலியவீர்ரகள் நடந்து கொண்டார்கள் என்றால் அதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாதுஎன்றார் யங்.
ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எப்போதுமே சற்று தலைக்கணம் ஜாஸ்தியே. அதுவும்முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற குஷியில், அதைகூடுதலாக வெளிக் காட்டி விட்டனர்.












Click it and Unblock the Notifications