சட்டம்,ஒழுங்கு-போலீசாருக்கு கருணாநிதி உத்தரவு
சென்னை:மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை தீவிரமாக கட்டிக் காக்க வேண்டும் என போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர்கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டம்-ஒழுங்கு, வெடிகுண்டு மிரட்டல்கள் ஆகியவை குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் இன்றுகருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
டிஜிபி முகர்ஜி, சென்னை போலீஸ் கமிஷ்னர் லத்திகா சரண் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
சென்னையில் பட்டப் பகலில் இரு ரெளடிகள் வெட்டிக் கொல்லப்பட்டது, நக்ஸல் ரகுவின் ஆயுத தயாரிப்புஆகிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், மாநில சட்டம்-ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது. ஆனாலும்இதைவிடவும் சிறப்பாக அதை கட்டிக் காக்க முடியும். இதற்காக கூடுதல் போலீசார் பணியில் அமர்த்தப்படுவர்.
சென்னை போலீசாருக்கு தரப்பட்டது மாதிரி ஹூண்டாய் கண்காணிப்பு கார்கள் மதுரை, கோவை, நெல்லை,சேலம், திருச்சி நகர காவல்துறையினருக்கும் தரப்படும். இந்த நகர்களுக்கும் கார்களைத் தர ஹூண்டாய் முன்வந்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications