தற்கொலைக்கு அனுமதி கோரி கலாமுக்கு கடிதம்
ஆக்ரா:உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவர்வீட்டாரின் கொடுமைகளை விளக்கிக் கூறி, தன்னைத் தற்கொலை செய்து கொள்ளஅனுமதிக்குமாறு குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆக்ரா மாவட்டம் அர்ஜூன் நகரைச் சேர்ந்தவர் அந்தப் பெண். அவரது கணவர்துர்கேஷ். இவர்களுக்கு கடந்த 2003ம் ஆண்டு திருமணம் நடந்தது.அன்று முதல் துர்கேஷும் அவரது குடும்பத்தினரும் இப்பெண்ணைக்கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
அந்த வீட்டில் ஒரு வேலைக்காரியைப் போல நடத்தியுள்ளனர். மேலும், வீட்டில்உள்ள நாய்களுக்குத்தான் முதலில் சாப்பாடு போடுவார்களாம். கடைசியில்மிஞ்சியதைத்தான் இந்த பரிதாபத்துக்குரிய பெண்ணுக்குக் கொடுப்பார்களாம்.
கல்யாணமான சில நாட்களிலேயே துர்கேஷுக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டதையும், தன்னை ஏமாற்றி அவர் 2வது திருமணம் செய்து கொண்டதையும்அறிந்துள்ளார் இப்பெண். இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தபோது அதைதெரிந்து கொண்ட துர்கேஷ் மிருகத்தனமாக அடித்துள்ளார்.
இந்தக் கொடுமைகளையெல்லாம் விளக்கி குடியரசுத் தலைவருக்கு கடிதம்எழுதியுள்ளார் இப்பெண்.












Click it and Unblock the Notifications