பஸ் கட்டணத்தை உயர்த்த மாட்டோம்: கருணாநிதி
திருச்சி:தமிழகத்தில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
திருச்சியில் வேலையற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்றுமாலை தொடங்கி வைக்கிறார். இதற்காக சென்னைலிருந்து ரயில் மூலம் திருச்சிக்கு அவர் வந்தார்.
ரயில் நிலையத்தில் திமுகவினர் திரளாக கூடி கருணாநிதிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ரயில் நிலையவரவேற்புக்குப் பின்னர் கருணாநிதி செய்தியாளர்களை: சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின்கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
கேள்வி: பஸ் கட்டணம் உயரும் என கூறப்படுகிறதே?
பதில்: உயர்த்த மாட்டோம்.
கேள்வி: பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்துவீர்களா?
பதில்: குறைக்க கூடாது என்று சொல்வோம் என நினைக்கிறீர்களா? விலைவாசியைக் குறைத்து மக்களுக்காகபாடுபடுகிற அரசு இந்த அரசு.
கேள்வி: இலங்கை பிரச்சினை தொடர்பாக அந்நாட்டு அரசு நாடாளுமன்றக் குழு அமைத்திருப்பது பலன்தருமா?
பதில்: மிகுந்த பலன் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. போரை நிறுத்த உகுந்த வழி எதுவோ, அதைமத்திய அரசு சிந்தித்து இலங்கையில் அமைதி காண முன்வர வேண்டும். இதுவே மக்கள் எதிர்பார்ப்பும் கூட.
இலங்கைப் பிரச்சினையில் எனது தனிப்பட்ட கருத்தை சூழ்நிலை வரும்போது நான் வெளியிடுவேன்.
சென்னை மட்டுமல்லாது, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை என பல பகுதிகளிலும் தொழில் வளர்ச்சித்திட்டங்களை அறிவித்துள்ளோம். படிப்படியாக அவை நடைமுறைக்கு வரும்.
கோவையில் மென்பொருள் பூங்கா அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. விரைவில் திருச்சியிலும்அமைக்கப்படும்.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை மத்தியஅரசுக்கு அனுப்பியுள்ளோம். இது சம்பந்தபமாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.
டாக்டர் ராமதாஸ் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை விமர்சிக்கவில்லை. அவர் கூறியது தவறான அர்த்தத்தில்பத்திரிகைகளில் வந்துள்ளது. மொத்தமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தால் பலன் இல்லை என்றுதான் அவர்கூறியுள்ளார் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications