இலங்கை தமிழ் எம்பி ரவிராஜ் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:கொழும்பில் யாழ்ப்பாணம் எம்.பி. ரவிராஜ் நடராஜா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்குறித்து விசாரிக்க ஸ்காட்லாந்து யார்டு போலீஸாரின் ஒத்துழைப்பை இலங்கை அரசுகோரியுள்ளது.

வடக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள சாவகச்சேரியிலிருந்து எம்.பியாகதேர்ந்தெடுக்கப்பட்டவர் ரவிராஜ். தமிழர்களிடையை செல்வாக்குடன் திகழ்ந்தவர்.இலங்கை அரசு மற்றும் பாதுகாப்புப் படையினர் தமிழர்கள் மீது நடத்தி வரும்அத்துமீறல்களைக் கண்டித்து குரல் கொடுத்து வந்தவர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் ஆதரவானவர். இந் நிலையில், நேற்றுகொழும்பில் அவரது வீட்டின் அருகே வைத்து அவரை மோட்டார் சைக்கிளில் வந்தஒரு மர்ம நபர் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிச் சென்றார். இந்த சம்பவம் இலங்கைத்தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரசின் சதிதான் இந்தப் படுகொலை என தமிழர்களிடையே கருத்துநிலவுகிறது. மேலும் விடுதலைப் புலிகளும், இலங்கை அரசே ரவிராஜ் கொலைக்குக்காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர்.

இந் நிலையில் இச்சம்பவத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷே கண்டனம்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

ரவிராஜ் கொலை சம்பவத்திற்கு அதிபர் ராஜபக்ஷே கடும் கண்டனம்தெரிவித்துள்ளார். இந்தக் கொலையை யார் நிகழ்த்தியது என்பதைக் கண்டுபிடிக்கஸ்காட்லாந்து யார்டு போலீஸாரின் உதவி நாடப்பட்டுள்ளது. இதுதொடர்பாகவெளியுறவுத்துறைக்கு அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விசாரணையில் ஸ்காட்லாந்து யார்டின் உதவியை பயன்படுத்திக் கொள்ளுமாறுகாவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்த கோழைத்தனமான, கொடிய செயலைச்செய்தவர்களைப் பிடிக்க வேண்டும் என்பதில் அதிபர் உறுதியாக உள்ளார்.

விசாரணையை விரைந்து மேற்கொள்ளுமாறும் காவல்துறை தலைவருக்கு அவர்உத்தரவிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா கண்டனம்:

ரவிராஜ் படுகொலைக்கு அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

நடராஜ் படுகொலை போன்ற குற்றச் செயல்கள் கடும் கண்டனத்துக்குரியவை. இதைச்செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். இந்த கொலைச் சம்பவம்தொடர்பாக இலங்கை அரசு தீவிர விசாரணை நடத்த வேண்டும். குற்றம்இழைத்தவர்களை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+