80 வயது காதலிக்காக மலையைக் குடைந்த 70
பெய்ஜிங்:80 வயது மனைவி மீதுள்ள தீராக் காதலால், மலையைக் குடைந்து 6000 படிக்கட்டுக்களை உருவாக்கிய 70 வயதுசீன முதியவருக்கு 2006ம் ஆண்டின் சிறந்த காதலர் விருது கிடைத்துள்ளது.
சீனாவைச் சேர்ந்தவர் லியூ குவாஜியாங். இவரது மனைவி ஷூ சாவோகிங். லியூவுக்கு 20 வயதாக இருந்தபோதுதன்னை விட 10 வயது அதிகமான ஷூ மீது காதல் பிறந்தது. ஷூ கணவரை இழந்த 2 குழந்தைகளுக்குத் தாய்ஆவார்.
காதலுக்கு கண் ஏது? ஷூவும், லியூவின் காதலை ஏற்றுக் கொண்டார். காதலில் திளைத்த இருவரும் திருமணம்செய்து கொண்டனர். இதையடுத்து சீனாவில் உள்ள மலைப் பிரதேசத்தை தேர்ந்தெடுத்து அங்கு குடியேறினர்.
அந்த மலை உச்சிக்குச் செல்ல சரியான பாதை கிடையாது. இதனால் ஷூ மேலிருந்து கீழே இறங்கவும், மேலேஏறவும் சிரமப்பட்டார். இதைப் பார்த்த லியூ படிக்கட்டுக்களை தானே அமைக்க முடிவு செய்தார்.
இதையடுத்து கடினமான அந்த மலையைக் குடைந்து படிக்கட்டுக்களை அமைக்க ஆரம்பித்தார். இது தொடங்கிஇப்போது 25 வருடங்கள் ஆகி விட்டன. காதலின் வேகத்தால் 6000 படிக்கட்டுக்களை செதுக்கி முடித்து விட்டார்லியூ.
இது சீனாவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலிக்காக படிக்கட்டுக்களை செதுக்க ஆரம்பித்த லியூ,தனது தள்ளாத வயதிலும் அந்த முயற்சியை விடாமல் தொடர்ந்து நடத்தி 6000 படிக்கட்டுக்களைஅமைத்திருப்பது சீனர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
லியூவின் காதலின் வலிமையைப் பார்த்து பாராட்டியுள்ள சீன அரசு, இப்போது லியூ தம்பதியினர் வசித்து வரும்மலைப் பகுதிக்கு மின்சார வசதியை ஏற்படுத்தித் தர முன்வந்துள்ளது.
லியூவின் இந்த காதல் படிக்கட்டு, அவருக்கும், அவரது மனைவி ஷூவுக்கும், 2006ம் ஆண்டின் சிறந்தகாதலர்கள் என்ற சிறப்பு விருதையும் பெற்றுத் தந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications