இங்கிலாந்து சிறப்புத் தூதர் இலங்கை வருகை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்து இலங்கை அரசை வலியுறுத்துவதற்காக முன்னாள்இங்கிலாந்து அமைச்சர் பால் மர்பி இன்று கொழும்பு வருகிறார்.

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் ஜெனீவாவில் சமீபத்தில் நடந்தபேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. யாழ்ப்பாணத்தையும், நாட்டின் பிற பகுதிகளையும் இணைக்கும் ஏ9 சாலையை திறக்க இலங்கை அரசு பிடிவாதமாக மறுத்து விட்டதால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை இலங்கை பாதுகாப்புப் படைகள்தீவிரப்படுத்தியுள்ளன. இந்த தாக்குதலில் ஏராளமான அப்பாவி தமிழர்கள் பலியாகி வருகின்றனர். மேலும்யாழ்ப்பாணத்திலும் தமிழர்கள் மீதுஇலங்கை ராணுவம் கடும் தாக்குதலை நடத்தி வருவதாக அங்கிருந்து தப்பி அகதிகளாக வருபவர்கள்தெரிவிக்கின்றனர்.

இலங்கை அரசின் இந்தப் போக்குக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தடைபட்டுள்ள அமைதி முயற்சிகளை மீண்டும் தொடங்குவது குறித்து இலங்கை அரசுடன் பேச்சு நடத்தஇங்கிலாந்து நாட்டின்முன்னாள் அமைச்சர் பால் மர்பி இன்று கொழும்பு வருகிறார்.

இதுகுறித்து கொழும்பில் உள்ள இங்கிலாந்து தூதரகம் வெளியிட்டுள்ள தகவலில், வட அயர்லாந்து பிரச்சினைதொடர்பான விவகாரத் துறையின் அமைச்சராக இருந்தவர் மர்பி. அந்த அனுபவத்தை அடிப்படையாகக்கொண்டு இலங்கைப் பிரச்சினையில் நிலவி வரும் தேக்க நிலையை உடைக்க முடியுமா என்று பால் மர்பிமுயற்சிக்கவுள்ளார்.

மேலும், வடக்கு அயர்லாந்து அரசியல் விவகாரத்துறை அமைச்சராகவும் அவர் இருந்துள்ளார். அவருடன்இங்கிலாந்து-அயர்லாந்து அரசு செயலகத்தின் இணைச் செயலாளரான கிறிஸ்டோபர் மெக்கேபேயும் உடன்வருகிறார்.

2 நாள் பயணமாக இலங்கை வரும் இருவரும் இலங்கை அமைதி முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரதிநிதிகளைசந்தித்துப் பேசவுள்ளனர். வடக்கு அயர்லாந்து அமைதி முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட உத்திகளை இலங்கைஅரசுத் தரப்புடன்அவர்கள் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து வந்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவிடம், நார்வே அமைதிமுயற்சியில் இங்கிலாந்தும் உதவத் தயாராக இருப்பதாக பிரதமர் டோனி பிளேர் தெரிவித்திருந்தார். அதன்விளைவாக தற்போது இங்கிலாந்து தூதராக பால் மர்பி இலங்கை வருகிறார் என்று அத்தகவல் தெரிவிக்கிறது.

இங்கிலாந்து தூதுக் குழுவினர் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை சந்திப்பார்களா என்பது குறித்து இதுவரைஉறுதியான தகவல் இல்லை.

ரவிராஜ் உடலுடன் மாபெரும் பேரணி:

இதற்கிடையில் கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் எம்.பி. நாகராஜா ரவிராஜ் உடலுடன்பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பிரமாண்ட பேரணி நடந்தது.

யாழ் குடாவைச் சேர்ந்த சாவகச்சேரியின் எம்.பியாக இருந்தவர் ரவிராஜ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்புதனது வீட்டுக்கு முன்பாக அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ரவிராஜைக் கொன்றதுஇலங்கை புலனாய்வுப் படைதான் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரவிராஜின் உடலுடன் கொழும்பில் நேற்று பிரமாண்டப் பேரணி நடந்தது. தேசிய போர் எதிர்ப்புமுன்னணி என்ற அமைப்பின் சார்பாக நடந்த இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.ரவிராஜ் உடலுடன் நடந்த இந்த பேரணியால் கொழும்பில் பதட்டம் நிலவியது. பேரணிக்கு பலத்த போலீஸ்பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழர்களைக் கொல்லாதே, மனித உரிமைகளுக்கு மதிப்பு கொடு என்பதுஉள்ளிட்ட கோஷங்களை முழங்கினர்.

ரவிராஜின் உடல் தற்போது சாவகச்சேரியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை அவரதுஇறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+