கேரளாவுக்கே திருப்பி விடப்படும் பெரியாறு நீர்!
மதுரை:முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடியைத் தாண்டியுள்ளது.அணைக்கு கூடுதலாக வரும் நீரை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேரளஅணைக்கே திருப்பி விட்டு வருகின்றனர்.
முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீரை சேமித்து வைக்கலாம்.ஆனால் கேரள அரசு 136 அடி வரை மட்டுமே தேக்கி வைக்க அனுமதிக்கிறது.இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பித்த உத்தரவில்,அணையின் உயரத்தை தற்போதுள்ள 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தவும்,அணையை பலப்படுத்திய பின்னர் 152 அடிக்கு உயர்த்தவும் உத்தரவிட்டது.
ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க கேரள அரசு மறுத்து அவசரச் சட்டம்கொண்டு வந்து விட்டது. இந்த நிலையில் தற்போது கேரளத்தில் பெய்து வரும் மழைகாரணமாக முல்லைப் பெரியாறு அணை 136 அடியைத் தாண்டியுள்ளது. இன்றுகாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 136.40 அடியாக இருந்தது.
இந் நிலையில் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் கூடுதல் நீரை தமிழகபொதுப்பணித்துறை அதிகாரிகள் இடுக்கி அணைக்கு திருப்பி விட்டு வருகின்றனர்.
கேரள அரசின் வீண் பிடிவாதத்தால் முல்லைப் பெரியாறு அணைக்கும் அபரிமிதமானநீர் வீணாக இடுக்கி அணைக்குப் போய் வருகிறது.
இதற்கிடையே, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக அடுத்த கட்டநடவடிக்கையை முடிவு செய்ய பல்வேறு விவசாய சங்கங்களின் கூட்டு ஆலோசனைக்கூட்டம் இன்று மதுரையில் நடைபெறுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications