பொன்னேரி ஏரி உடைந்து கிராமகளுக்குள் தண்ணீர்
பொன்னேரி:பொன்னேரி அருகே ஏரி உடைந்து 10 கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதியில்போக்குவரத்து பாதிப்புக்கப்பட்டுள்ளது.
பழவேற்காடு அருகே புதுச்சேரிமேடு என்னும் கிராமத்தில் விவசாய பாசனத்துக்கு பயன்படும் பெரியஏரியுள்ளது. இங்கு கடந்த சில தினங்களாக பெய்த கன மழையால் ஏரி நிரம்பியது.
இந்நிலையில் நேற்றிரவு திடீரென ஏரியில் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏரி அருகே உள்ளபுதுச்சேரிமேடு, தொட்டி மேடு, சீரப்பாக்கம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்தகிராம மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
அக்கிராம மக்கள் பலர் தனக்கு தேவையான பொருட்களை மட்டும் எடுத்து கொண்டு கிராமத்தை விட்டுவெளியேறி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை புதுச்சேரி மேடு பஞ்சாயத்து தலைவர் பார்வையிட்டு மீட்புபணிகளை செய்து வருகிறார்.
ஏரி உடைந்ததால் சாலையில் தண்ணீர் ஓடியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications