மீண்டும் கலாம்-கருத்துக் கணிப்பில் ஆதரவு
டெல்லி:ஜனாதிபதி அப்துல் கலாமே மீண்டும் அந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும்என த வீக் நடத்திய கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில்பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் மிகச் சிறப்பாக செயல்படுவதாக கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்கள்தெரிவித்துள்ளனர்.
த வீக் ஆங்கில இதழும், சி-ஓட்டர் என்ற பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனம்இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தின.
ஜூன் மாதத்துடன் பதவியிலிருந்து ஓய்வு பெறும் குடியரசுத் தலைவர் கலாமுக்குமீண்டும் அப்பொறுப்பை வழங்கலாமா, இப்பொறுப்புக்கு வரத் தகுதியான பிறதலைவர்கள் யார் என்பதுதான் கருத்துக் கணிப்பின் முக்கிய கேள்விகள்.
இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படிகருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 4ல் 3 பேரின் ஆதரவு கலாமுக்குக்கிடைத்துள்ளது.
சுமார் 77.9 சதவீதம் பேர் கலாமுக்கே மீண்டும் குடியரசுத் தலைவர் பதவியை வங்கவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதுவரை இருந்தவர்களிலேயே இந்தியாவின் மிகச் சிறந்த குடியரசுத் தலைவர்கலாம்தான் என்றும் 61.2 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். கலாம் மிகச்சிறப்பாக செயல்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்துல் கலாம், துணை குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத், கரண் சிங்ஆகியோர் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக இருந்தால், கலாமுக்கு64 சதவீதம் பேரும், ஷெகாவத்துக்கு 15.3 சதவீதம் பேரும், சிங்குக்கு 6.9 சதவீதம்பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நாட்டில் இதுவரை இருந்தவர்களில் சிறந்த குடியரசுத் தலைவர் யார் என்ற கேள்விக்குகலாமுக்குத்தான் அதிகமானோரின் ஆதரவு கிடைத்துள்ளது.
கலாமுக்கு ஆதரவாக 42 சதவீதம் பேரும், ராஜேந்திர பிரசாத்துக்கு ஆதரவாக 21.8சதவீதம் பேரும், ராதாகிருஷ்ணனுக்கு 14 சதவீதம் பேரும், கே.ஆர்.நாராயணனுக்கு 6சதவீதம் பேரும், எஸ்.டி.சர்மாவுக்கு 4 சதவீதம் பேரும், ஜெயில் சிங், ஜாகிர்உசேனுக்கு தலா 3.5 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
(நம் ஊர் ஆர்.வெங்கட்ராமனுக்கு சொல்லிக் கொள்ளும்படியான சதவீத ஆதரவுகிடைக்கவில்லை)
அடுத்த குடியரசுத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற கேள்விக்குகலாமுக்கு ஆதரவாக 43.7 சதவீதம் பேரும், வாஜ்பாய்க்கு ஆதரவாக 13.1 சதவீதம்பேரும், சோனியாவுக்கு ஆதரவாக 10.8 சதவீதம் பேரும், இன்போசிஸ் நிறுவனர்நாராயணமூர்த்திக்கு 4.6 சதவீதம் பேரும், அமிதாப்பச்சனுக்கு 3.8 சதவீதம் பேரும்,டெண்டுல்கருக்கு 1.7 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கலாமின் துணிச்சலான செயல்பாடுகள் தங்களுக்குப் பிடிக்கும் என 67.5 சதவீதம் பேர்தெரிவித்துள்ளனர்.
சென்னை, பெங்களூர், அகமதாபாத், டெல்லி, குவஹாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா,கொச்சி, மும்பை, பாட்னா, புனே, ரெய்ப்பூர், சண்டிகர், கான்பூர் உள்ளிட்ட 22நகரங்களைச் சேர்ந்த 1,240 பேரிடம் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இதற்கிடையே, கலாமை மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு செய்யக் கோரி பிரதமர்மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோருக்கு இதுவரை கிட்டத்தட்ட70,000 இ-மெயில்கள் வந்துள்ளனவாம்.
ஆனால், மீண்டும் பதவிக்கு வர தனக்கு விருப்பமில்லை என்று கூறியுள்ள கலாம்,மீண்டும் கல்விப் பணிக்கே திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்தவுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் உயர் கல்விமாணவர்களுக்கு பாடம் நடத்தும் முடிவில் உள்ளார் கலாம்.












Click it and Unblock the Notifications