ஜெ அலட்சியம்-ரூ.3 கோடி போயே போச்சு
சென்னை:ஜெயலலிதா காட்டிய அலட்சியத்தால் தமிழக பள்ளி மாணவர்களுக்கு கிடைத்திருக்கவேண்டிய ரூ. 3 கோடி மத்திய அரசு நிதி கிடைக்காமல் போய்விட்டதாக முதல்வர்கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கல்வி தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு ஒலிநாடாவுடன் (டேப் ரெக்கார்டர்களுடன்) கூடிய வானொலிப்பெட்டிகளை வாங்குவதற்கும், வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளைவாங்குவதற்கும் ரூ. 3.10 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது.
2000ம் ஆண்டு திமுக ஆட்சியில் ரூ. 85.40 லட்சம் செலவில் 6,100 வானொலிபெட்டியுடன் கூடிய ஒலிநாடாக் கருவிகளையும்,
ரூ. 3 கோடிக்கு 2,000 வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளையும் வாங்கி ஊராட்சிஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கிட பள்ளிக் கல்வித்துறையின்சார்பில் உத்தரவு வெளியிடப்பட்டது.
இந் நிலையில் திமுக ஆட்சி மாறி அதிமுக ஆட்சி பொறுப்பேற்றது. இதுதொடர்பானகருத்துரு ஜெயலலிதா அலுவலகத்திற்கு நான்கு முறை கையெழுத்திற்காகஅனுப்பப்பட்டது. கல்வி அமைச்சர் தம்பிதுரையும், நிதியமைச்சர் பொன்னையனும்கையெழுத்திட்டு முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பினார்கள்.
முதல்வர் கையெழுத்து இல்லாமலேயே அவரது செயலர் கோப்பில் ஒரு கேள்வியைகேட்டு பள்ளிக் கல்வித்துறை செயலருக்கு திரும்ப அனுப்பி விட்டார். பதில் தயாரித்துமீண்டும் அமைச்சர்கள் வழியாக முதல்வர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
ஆனால், ஆட்சி மாறுகிற வரை ஜெயலலிதா கையெழுத்துப் போடவே இல்லை.இதற்கிடையே, மத்திய அரசு அந்த நிதியை பயன்படுத்தியதற்கான சான்றினைகேட்டும், பயன்படுத்தாவிட்டால் திரும்ப மத்திய அரசுக்கு ஒப்படைக்க கோரியும்அல்லது மற்ற திட்டத்திற்கு மத்திய அரசு அளிக்கும் தொகையில் கழித்துக்கொள்ளப்படும் என்றும் எச்சரித்தது.
2006ம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் இந்த தொகையை (ரூ. 3.10கோடி) மற்றொரு திட்டமான தகவல் தொழில்நுட்ப திட்டத்திற்காக மத்திய அரசுஅளிக்க வேண்டிய பங்குத் தொகையில் சேர்த்து அதை ஈடுகட்டியுள்ளது.
எனவே மத்திய அரசின் சார்பில் தமிழக அரசுக்கு ஒரு நல்ல திட்டத்திற்காகவழங்கப்பட்ட ரூ. 3 கோடிக்கு மேற்பட்ட தொகை அதிமுக அரசின் அலட்சியம்,தாமதம் காரணமாக குறிப்பிட்ட கிராமப்புற மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்நலனுக்காக பயன்படுத்தப்படாத நிலைக்கு உள்ளாகி, திசைமாறிப் போனதுதான் நமதுமாநிலம் கண்ட பலன் என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications