யாழ்: ரெட்கிராஸ் மூலம் உணவு அனுப்பலாம்-ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை:இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துகளை இலங்கை அரசு மூலம் வழங்காமல்செஞ்சிலுவைச் சங்கம் மூலம் வழங்க வேண்டும் என ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து சென்னை இலங்கைத் துணைத் தூதரகம் முன்போராட்டம் நடத்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திமுக அரசிடம் அனுமதி கேட்டும், அதைத் தராமல்மறுத்ததும், வைகோவை கைது செய்ததும் கண்டனத்துகுரியது.

இது போன்ற மக்கள் நலனுக்கான போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் முக்கிய ஜனநாயகக் கடமைகளாகும்.இது போன்ற போராட்டங்களுக்கு எனது ஆட்சியில் முறையாக அனுமதி தரப்பட்டது.

ஆனால், இப்போதைய திமுக அரசு அனுமதி வழங்க மறுத்து மக்கள் விரோத செயலில் ஈடுபட்டுள்ளது.

தற்போது மத்திய அரசு இலங்கையில் அவதிப்படும் தமிழர்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்புவதாகஅறிவித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் இலங்கை அரசின் மூலமாக இத்தகைய உதவிகள் எந்த அளவுக்குபாதிக்கப்பட்டுள்ள தமிழர்களைச் சென்றடையும் என்பது கேள்விக்குரியதாகும்.

எனவே இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துகளை இலங்கை அரசு மூலம்வழங்காமல் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப வேண்டும் என ஜெயலலிதா கூறியுள்ளார்.

புலிகள்-இலங்கை கடற்படை மோதல்

இதற்கிடையே மன்னார் அருகே இலங்கை கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமி இடையே நடந்தமோதலில் கடற்படையின் 5 படகுகள் மூழ்கடிக்கப்பட்டன.

விடத்தல் தீவு என்ற இடத்தில் இந்த மோதல் நடந்தது. இந்தப் பகுதிக்குள் இன்று காலை நுழைந்த இலங்கைகடற்படைப் படகுகள் தாக்குதலை தொடங்கின. இதையடுத்து புலிகளின் ரோந்துப் படகுகள் பதில் தாக்குதல்நடத்தின.

இதில் கடற்படைப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டன. இதில் 10 கடற்படையினர் பலியாயினர். இதையடுத்துஇலங்கை விமானப் படையின் விமானங்கள் குண்டு வீசித் தத்ககுதல் நடத்தின. இதில் 3 விடுதலைப் புலிகள்காயமடைந்தனர்.

ஆனால், இலங்கை ராணுவ செய்தியாளர் பிரசாத் கூறுகையில், இந்தத் தாக்குதலில் புலிகளின் 3 படகுகள்மூழ்கடிக்கப்பட்டன என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+