ஆசிரியர் செக்ஸ் டார்ச்சர்- மாணவிகள் புகார்
சென்னை:பள்ளி ஆசிரியர் ஒருவர் தங்களுக்கு செக்ஸ் டார்ச்சர் தந்து வருவதாக 20க்கும் மேற்பட்ட மாணவிகள் இன்றுகாவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து அந்த ஆசிரியர் தலைமறைவாகிவிட்டார்.
சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள அரசு தியாகராஜர் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த 20க்கும்மேற்பட்ட மாணவிகள் இன்று காலை காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்தனர். அதில்கூறப்பட்டுள்ளதாவது:
நாங்கள் 8ம் வகுப்பு படித்து வருகிறோம். எங்களது கணக்கு ஆசிரியரான சுப்புராஜ் (45) தினமும் எங்களிடம்தவறாக நடக்கிறார். வகுப்பு முடிந்ததும் மாணவர்களை போகச் செச்லிவிட்டு மாணவிகளை மட்டும் இருக்கச்சொல்வார்.
நாங்கள் மட்டும் இருக்கும்போது எங்களிடம் செக்ஸ் வார்த்தைகளை பயன்படுத்தி அசிங்கமாக பேசுவார்.அவரை நெருங்கி நிற்கச் சொல்வார். கையை பிடித்து இழுப்பார், கன்னத்தை கிள்ளுவார்.
சீருடை அழுக்காக இருப்பதாக சொல்லி சுடிதார், பாவாடை சட்டையை இழுத்து வயிற்றை தடவுவார். மிகஅசிங்கமாக பேசி தொந்தரவு செய்வார்.
நோட்டில் கையெழுத்து வாங்கச் சென்றால் குனிந்து நிற்கச் சொல்வார். அவரது அசிங்கமான பார்வையில் இருந்துதப்பவே முடியாது. அவருடன் வெளியில் வரச் சொல்லி தொந்தரவு செய்தார். நாங்கள் மறுத்ததால் திட்டினார்,மேலும் பெயில் ஆக்கிவிட்டுவதாகவும் மிரட்டுகிறார்.
சாக்பீசை எங்கள் நெஞ்சில் வீசுவார். சுப்புராஜின் இந்த தொந்தரவுகளுக்கு ஆசிரியை விஜயாவும் உடந்தையாகஉள்ளார். சுப்புராஜை பற்றி எங்களிடம் விஜயா பேசுவார். சுப்புராஜ் பற்றி யாராவது தப்பாக பேசினால்தொலைத்துவிடுவேன் என்று மிரட்டுகிறார்.
இது குறித்து பெற்றோரிடம் சொன்னோம். 10 நாட்களுக்கு முன் தலைமை ஆசிரியையிடம் புகார் செய்தும்பலனில்லை. எனவே ஆசிரியர் சுப்புராஜ் மீதும் ஆசிரியை விஜயா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅந்த மாணவிகள் கூறியுள்ளனர்.
மாணவிகளே போலீஸ் நிலையத்துக்கு வந்து புகார் தந்தததால் பரபரப்பான போலீசார் உடனடியாக சுப்புராஜ்மற்றும் விஜயா மீது வழக்குப் பதிவு செய்தனர்.
சுப்புராஜைப் பிடிக்கச் சென்றபோது அவர் விவரம் தெரிந்து தலைமறைவாகிவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications