கருணாநிதி எச்சரிக்கை: பிரதமர் தலையீடு-திரும்பிப் போன கடற்படை
இடுக்கி:முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து கொண்டிருந்த கடற்படையினரைஉடனடியாக திரும்பிச் செல்லுமாறு பிரதமரும் மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சரும்உத்தரவிட்டதால் அவர்கள் அணையை ஆய்வு செய்யம் பணியை பாதியிலேயேகைவிட்டு விட்டு கொச்சி திரும்பினர்.
கேரள அரசின் வேண்டுகோளுக்கேற்ப தென் பிராந்திய கமாண்டர் எம்.கே.ரெட்டிதலைமையில் 17 நீச்சல் வீரர்கள் அடங்கிய கடற்படைக் குழு நேற்று பெரியாறுஅணைக்கு வந்தது.
அவர்கள் அணைக்கட்டுக்குள் செல்லாமல் படகில் இருந்தபடி அணையை கேரளபகுதியில் ஆய்வு செய்தனர். பின்னர் தமிழக பகுதிக்கு வந்தனர். ஆனால், அவர்களைதமிழக அரசின் செயற் பொறியாளரான பாஸ்கரன் உள்ளே விட அனுமதிக்கமறுத்துவிட்டார்.
இதனால் அவருக்கும், கேரள அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம்ஏற்பட்டது. கேரள அதிகாரிகளின் அத்துமீறலை தமிழக அதிகாரிகள் வீடியோவில்பதிவு செய்தனர்.
அப்போது பாஸ்கரன், கண்காணிப்பாளர் சுந்தரராஜன் ஆகியோரது கேமராக்களைகேரள அதிகாரிகளும் கடற்படை வீரர்களும் பறித்து கலாட்டா செய்தனர்.
அணைப் பகுதியில் நீர்க்கசிவு ஏற்படும் அளவைக் குறிக்கும் காலரி பகுதியைபார்வையிட கடற்படையினர் முயன்றனர். ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்கபொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதியாக மறுத்து விட்டனர்.
இந் நிலையில் கடற்படையின் ஆய்வு தொடர்ந்தால் கடும் விளைவுகள் ஏற்படும்என்ற முதல்வர் கருணாநிதியின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பெரியாறு அணைக்குச்சென்ற கடற்படையினரைத் திரும்பப் பெறுமாறு கேரள அரசுக்கு உத்தரவிடுமாறுமத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சைபுதீன் சோஸுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து கேரள நீர்ப்பாசன அமைச்சர் பிரேமச்சந்திரனை, மத்தியநீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுமுல்லைப் பெரியாறு ஆய்வுப் பணிக்கு அனுப்பப்பட்ட கடற்படை வீரர்களையும்,வண்டிப் பெரியாறில் நிலை கொண்டுள்ள நான்கு மூத்த ராணுவ அதிகாரிகளும்உடனடியாக அங்கிருந்து கிளம்ப வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து முதல்வர் அச்சுதானந்தனிடம் ஆலோசனை மேற்கொண்டபிரேமச்சந்திரன், பின்னர் கடற்படை வீரர்களை உடனடியாகத் திரும்புமாறு கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து கடற்படை வீரர்களும், ராணுவ அதிகாரிகளும்திரும்பிச் சென்றனர்.
முன்னதாக அணைக்குள் செல்லாமல் படகில் இருந்தபடி அணையை முழுமையாகசுற்றிப் பார்த்த கடற்படை வீரர்கள் சிறிய அளவிலான ஆய்வுகளை மேற்கொண்டதாகதமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications