கருணாநிதிக்கு சால்வை போட்ட சரத்-ராதாரவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதிக்கு,சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகிய நடிகர் சரத்குமார் சால்வை அணிவித்துவணங்கினார்.

Karunanidhi with Sarath Kumar and Radharavi
தனது மனைவி ராதிகா சகிதமாக திமுகவை விட்டு அதிமுகவில் இணைந்த சரத்குமார்சமீபத்தில் அங்கிருந்து விலகினார். அவரை தனிக் கட்சி ஆரம்பிக்கக் கோரி நாடார்இன பிரமுகர்கள் நெருக்கி வருகின்றனர்.

நாடார் சமூகப் பிரமுகர்கள் பலருடன் அவர் ரகசிய ஆலோசனைகள் நடத்தி வருகிறார்.

இந் நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜனின் மகன் கே.ஆர். சுரேஷ்திருமணம் சென்னை வடபழனி முருகன் கோவிலில் நடந்தது. தி.நகரில் உள்ள நடிகர்சங்க சுவாமி சங்கரதாஸ் கலையரங்கில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் முதல்வர் கருணாநதி கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தார். அப்போதுஅங்கு வந்த நடிகர் சரத்குமாரும், நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவியும் (இவர்அதிமுகவில் ஓரம் கட்டப்பட்ட நிலையில் இருக்கிறார்) கருணாநிதிக்கு பொன்னாடைபோர்த்தி வரவேற்றனர்.

அதிகவிலிருந்து விலகிய சரத்குமாரும், ஜெயலலிதாவின் ஹிட் லிஸ்ட்டில்இருப்பவருமான ராதாரவியும் கருணாநிதிக்குப் பொன்னாடை போர்த்தி வரவேற்றதுசலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் ராதாரவிக்கு அதிமுக ஆப்பு வைக்கும் எனத் தெரிகிறது. ஏற்கனவே அதைஎதிர்பார்த்துக் காத்திருக்கும் ராதாரவியும் திமுகவில் சேர நோட்டம் விட்டுக்கொண்டிருக்கிறார்.

இந் நிலையில் சரத்துடன் போய் கருணாநிதிக்கு அவரும் பொன்னாடைபோர்த்தியிருக்கிறார்.

திமுகவிலிருந்து விலகிய பின்னர் கருணாநிதியை சரத்குமார் சந்திக்கவில்லை.சமீபத்தில் திரையுலகம் சார்பில் நடந்த கருணாநதிக்குப் பாராட்டு விழாவிலும் ராதிகாதான் கலந்து கொண்டாரே (இதனால் தான் அவரை கட்சியை விட்டு நீக்கினார்ஜெயலலிதா) தவிர சரத்குமார் கலந்து கொள்ளவில்லை.

இந் நிலையில் முதல் முறையாக அவர் கருணாநிதியை சந்தித்து பொன்னாடைபோர்த்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+