இன்றாவது வெற்றி பெறுமா இந்தியா?
கேப்டவுன்:இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த வெறுப்பை சம்பாதித்துள்ள இந்திய அணி இன்று தென்ஆப்பிரிக்காவுடன் 3வது ஒரு நாள் போட்டியில் மோதுகிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய நெருக்கடியான நிலையில் இந்திய அணி களம் காணுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி சமீப காலமாக தொடர்ந்து தோல்விகளைக் கண்டு வேதனை சாதனையை படைத்துவருகிறது. கடந்த நான்கு கிரிக்கெட் தொடர்களில் 14 ஆட்டங்களில் 3 போட்டிகளில் மட்டுமே இந்தியாவுக்குவெற்றி கிடைத்தது. மற்ற அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி ரசிகர்களின் கொந்தளிப்பைஅதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி கடந்த புதன்கிழமை டர்பன்நகரில் நடந்த 2வது ஒரு நாள் போட்டியில் (நல்ல வேளையாக மழை காரணமாக முதல் போட்டி ரத்தாகி விட்டது)தென் ஆப்பிரிக்காவை சந்தித்து படு கேவலமாக விளையாடி 91 ரன்களில் சுருண்டு, 157 ரன்கள் வித்தியாசத்தில்தோல்வியடைந்தது.
இந்தத் தோல்வி இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டது. இந்திய கிரிக்கெட் வீரர்களை திட்டாதரசிகர்களே இல்லை எனும் அளவுக்கு மொத்த வீரர்களும் ரசிகர்களின் அதிருப்தியைப் பெற்றுள்ளனர். அத்தோடுநாடாளுமன்றத்திலும் பல்வேறு கட்சிகளின் எம்.பிக்களும் கிரிக்கெட் வீரர்களை பிடி பிடியென்று பிடித்துவிட்டனர்.
இத்தகைய நெருக்கடியான நிலையில், இன்று கேப்டவுன் நகரில் 3வது ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது.இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாய நெருக்கடியில், இந்திய அணி உள்ளது.
முன்னணி வீர்ரகளான சச்சின், டிராவிட், முகம்மது கைப், டோணி, ரெய்னா ஆகியோர் சிறப்பாக விளையாடியேஆக வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் 2வது ஒரு நாள் போட்டியில், இவர்கள் யாருமேதுணிச்சலுடன் ஆட முயற்சிக்கவே இல்லை என்ற அதிருப்தி ரசிகர்களிடம் நிலவுகிறது.
சோதனை முயற்சி, சோதனை முயற்சி என்று அணி வீரர்களின் பேட்டிங் ஆர்டரை மாற்றி மாற்றி தோல்விகளைச்சந்தித்து தொடர்ந்து ரசிகர்களை சோதித்து வருகிறார் பயிற்சியாளர் சேப்பல். அவர் தொடர்ந்து பயிற்சியாளர்பதவியில் நீடிக்கவும் இந்தத் தொடரில் இந்திய அணி பெறப் போகும் வெற்றிகள்தான் முக்கியமாக இருக்கும்.
பேட்டிங் படு கேவலமாக இருக்கும் நிலையில் பந்துவீச்சு பரவாயில்லை ரகமாக இருக்கிறது. 2வது போட்டியில்சிறப்பாக பந்து வீசிய முனாப் பட்டேல் காயமடைந்துள்ளதால் இந்த போட்டியில் அவர் விளையாட மாட்டார்எனத் தெரிகிறது. அவருக்குப் பதில் பதான் களம் இறங்கலாம். ஏற்கனவே வீரேந்திர ஷேவாக்காயமடைந்துள்ளார்.
இந்திய அணி இப்படி தடுமாறி வரும் நிலையில், மறுபக்கம் தென் ஆப்பிரிக்க அணி படு பக்கவாக இருக்கிறது.பேட்டிங், பெளலிங் என அனைத்துத் துறையிலும் வலுவுடன் உள்ள தென் ஆப்பிரிக்க அணியின் தூண் போலஜேக் கல்லிஸ் உள்ளார்.
அசுர பலத்துடன் உள்ள தென் ஆப்பிரிக்க அணி இந்தப் போட்டியிலும் வென்று 2-0 என்ற முன்னிலையைஅடையை மும்முரமாக உள்ளது.
இரு அணிகளும் வெற்றியை குறி வைத்து இன்று களம் இறங்குவதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.












Click it and Unblock the Notifications