வெளிநாட்டு வேலை மோகம்-கலாம் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:வெளிநாட்டு வேலை மீதான இந்திய இளைஞர்களின் மோகம் ஒழிய வேண்டும் என்று குடியரசுத் தலைவர்அப்துல் கலாம் கூறியுள்ளார்.

யு ஆர் பான் டு பிளாசம் என்ற புதிய நூலை எழுத்தாளர் அருண் திவாரி உதவியுடன் எழுதியுள்ளார் அப்துல்கலாம். இது இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டு அடுத்த மாதம் வெளியாகிறது.

கலாமின் புதிய நூல் குறித்து அருண் திவாரி கூறுகையில், நன்கு படிக்க வேண்டும். வெளிநாடுகளுக்குச் சென்றுவேலை பார்க்க வேண்டும் என்ற மோகம் நமது நாட்டு இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.

தாயகத்தில் படித்து விட்டு வெளிநாட்டு நிறுவனங்களில் அடிமையாக பணியாற்றுவதை எந்த நாடாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது நாட்டின் எதிர்காலத்தையே பாதிக்கும் என்று கலாம் அடிக்கடி கூறுவார்.

இந்தக் கருத்தையே இப்புத்தகத்தில் விரிவாக எடுத்துரைத்துள்ளார் கலாம். இந்தியாவில் இல்லாத வளமேஇல்லை. கற்ற கல்வியை நாட்டுக்காக பயன்படுத்த இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும், முன்வர வேண்டும்என்று இந்த நூலில் கலாம் வலியுறுத்தியுள்ளார் என்றார் திவாரி.

ஏற்கனவே அக்னிக் சிறகுகள் என்ற நூலை கலாம் எழுதி அந்தப் புத்தகம் மிகப் பெரிய அளவில்விற்பனையானது, பல இளைஞர்களுக்கு வழிகாட்டி போலவே அந்த நூல் மாறி விட்டது என்பதுநினைவிருக்கலாம். தனது அடுத்த நூலில் கலாம் இளைஞர்களை குறி வைத்திருக்கிறார். இந்தப் புத்தகமும் இந்தியஇளைஞர்களின் பைபிளாக மாறும் என்று எதிர்பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+