விடுதலைப் புலிகளின் ஆயுத படகு தகர்ப்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:இலங்கை கடற்படையினருக்கும், விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் பிரிவுக்கும் இடையே நடந்த கடும்சண்டையில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் படகு தகர்க்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு ஒரு படகு இன்று வந்தது. அதைப் பார்த்தகடற்படையினர் அந்தப் படகில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். விடுதலைப் புலிகளும் பதிலுக்கு கடும்தாக்குதலை தொடுத்தனர்.

இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் கடலில் கடும் சண்டை நடந்தது. சண்டையின் முடிவில் விடுதலைப்புலிகளின் படகை கடற்படையினர் குண்டு வீசித் தகர்த்தனர். அந்தப் படகில் இருந்த புலிகள் அமைப்பைச் சேர்ந்த6 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, மாவீரர் தினத்தையொட்டி விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இன்று உரைநிகழ்த்தவுள்ளார். இதில் பல முக்கிய முடிவுகளை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபாகரன் பேச்சு குறித்துத்தான் தற்போது இலங்கை முழுவதும் ஒரே பேச்சாக உள்ளது. அவரது உரையில்இடம்பெறப் போகும் அம்சங்கள் குறித்த எதிர்பார்ப்ப விவாதங்கள் இலங்கை முழுவதும் படு சூடாக நடந்துவருகின்றன.

மாவீரர் தினத்தையொட்டி புலிகள் கடும் தாக்குதலைத் தொடுக்கக் கூடும் என்ற அச்சத்தால் தலைநகர் கொழும்புமற்றும் சிங்களர் பகுதிகளில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, விடுதலைப் புலிகள் வசம் உள்ள தமிழர் பகுதிகளில் விடுதலைப் புலிகள் அமைப்பின்செங்கொடிகள் பறக்கின்றன. பிரபாகரன் படங்கள் தமிழர் பகுதிகள் முழுவதும் வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தபுலிகள் வீரர்களின் படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மீண்டும் பெரிய அளவில் போர் உண்டாகும் என்ற அச்சம் யாழ்ப்பாணம் தமிழர்கள் மத்தியில்பரவி வருகிறது. மீண்டும் வேறு இடங்களுக்கு இடம் பெயறும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக அவர்கள்கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+