தமிழகம், கேரளாவுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை
டெல்லி:
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் 29ம் தேதிநடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு காண முயல வேண்டும் என தமிழகம்மற்றும் கேரள முதல்வர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை உயரம் தொடர்பாக கேரள அரசின் சட்டத் திருத்தமசோதாவை செல்லாது என்று அறிவிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுஇன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால், நீதிபதிகள் சி.கே.தாக்கூர்,ரவீந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது உச்சநீதிமன்றம் இந்தப் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே பிறப்பித்தஉத்தரவில் (அதாவது 142 அடியாக உயரத்தை அதிகரிக்கலாம் என்ற உத்தரவு)மாற்றம் செய்யுமாறு கோரி கேரள அரசின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இரு தரப்பு மனுக்களையும் பரிசீலித்த நீதிபதிகள், இது அரசியல் சர்ச்சையாகமாறியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், நீதிமன்றத்திற்கு வெளியேசுமூக தீர்வு காண முயல வேண்டும். வழக்குப் போடுவதை விட இரு தரப்பும் பேசித்தீர்வு ஏற்படுத்திக் கொள்ள முயல வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
மேலும், டெல்லி பேச்சுவார்த்தையில் இரு மாநில முதல்வர்களும் தவறாமல் கலந்துகொண்டு சுமூக தீர்வை எட்ட முயல வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுரைவழங்கினர்.
திமுக, பாமக, காங்., எம்பிக்கள் பிரதமரிடம் மனு:
இதற்கிடையில் முல்லை பெரியாறு அணை விவகரம் தொடர்பாக திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூ. மற்றும் பாமக அமைச்சர்கள் மற்றும்எம்பிக்கள் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
அதில் கூறப்பட்டதாவது, முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்ந்த கேரள அரசு அனுமதிக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும். அணை பலமாக இருக்கிறது என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் கேரள அரசு கடற்படை வீரர்கள் மூலம் அணையை ஆய்வு செய்தது. உச்சநீநிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். எனவே அணையின்பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்பு படையை அனுப்ப மத்திய அரசு, தமிழக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அதில் கூறியிருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications