இலங்கை-சென்னையில் மாபெரும் உண்ணாவிரதம்

சென்னை:ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து தமிழர் இயக்கம் சார்பில் இன்று சென்னையில் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது.
இலங்கையில் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து இந்த உண்ணாவிரதப் போராட்டம்நடைபெற்றது. வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காலை 8 மணிக்கு போராட்டம் தொடங்கிய போராட்டம்மாலை 5 மணி வரை நடந்தது.
கவிஞர் வைரமுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்தார். உண்ணாவிரதப் போராட்டத்தைமாலையில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி முடித்து வைத்தார்.
கவிஞர்கள் அறிவுமதி, இன்குலாப், கனிமொழி, எழுத்தாளர்கள் பிரபஞ்சன், சின்னக் குத்தூசி, விடுதலை சிறுத்தைஎம்எல்ஏ ரவிக்குமார், நடிகர் சத்யராஜ். நடிகை ஸ்ரீபிரியா, முன்னாள் அமைச்சரும் சமீபத்தில் திமுகவில்இணைந்தவருமான இந்திர குமாரி, மதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த விஜயா தாயன்பன் உள்ளிட்டபல்துறையினர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
வைரமுத்து ஆவேசம்:
போராட்டத்தை தொடங்கி வைத்து வைரமுத்து பேசுகையில்,
கவிஞர்கள், எழுத்தாளர்கள் வெறும் கனவு காண்பவர்கள் மாத்திரமல்ல, தமிழர்கள் வேதனைப்பட்டால்நாங்களும் வேதனைப்படுவோம். இந்த உண்ணாவிரதத்தை நான் தொடங்கி வைப்பதாக அறிவித்தார்கள்.உண்மையில் நான் தொடங்கி வைக்கவில்லை.
சிங்களம் தான் இனி ஆட்சி மொழி என்பதை கண்டித்து 1956ம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றம் முன் ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கினார்கள். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் முதலில்அவர்களின் தாய்மொழியை அழியுங்கள் என்பார்கள். அது போலத்தான் தமிழின படுகொலையை கண்டித்துமுதலில் தாய்மொழி மீது தாக்குதல் தொடங்கியது இலங்கை.
1956ல் தொடங்கிய போராட்டம் இன்று வரை அரை நூற்றாண்டு காலமாக நடந்தது வருகிறது. அதில் இந்தப்போராட்டமும் ஒன்று.
யாழ்பாணம் வாகரையில் தமிழர்கள் பட்டினியால் மடிகிறார்கள் என்று சிங்கள அரசே அறிவித்துள்ளது.இலங்கையில் ரத்தக் கம்பளத்தில் நடக்கும் ராஜக்சே இந்தியா வந்துள்ளார். இங்கே அவருக்கு ரத்தின கம்பளவரவேற்பு அளிக்கிறார்கள்.
இந்திய அரசைக் கேட்கிறேன், இது நியாயமா?. இலங்கை அரசின் தலைவர் என்ற முறையில் ராஜபக்சேவுக்குமரியாதை தரலாம். ஆனால், அந்த பதவிக்குரிய வேலையை அவர் செய்கிறாரா? செய்யவில்லை.
இதுவரை 18,412 மாவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தமிழ் ஈழ போராட்டத் தலைவர் பிரபாகரன்தெரிவித்துள்ளார். யாழ்பாணத்தில் மாவீரர்கள் கல்லறை மீது புல்டோசர்களை வைத்து உழுகிறார்கள். கல்லறையில்புதைக்கப்படும் தமிழர்கள் சடலங்களை மீண்டும் தூக்கில் தொங்க விடுகிறார்கள். கல்லறையில் புதைக்கப்பட்டமாவீரர்கள் விதைக்கப்பட்டுள்ளார்கள். தமிழனத்தை யாராலும் அழிக்க முடியாது.
இந்தப் போராட்டத்தை தொடங்கி வைத்ததற்காக ரத்தக் கண்ணீர் வடிக்கிறேன். ஈழத்தில் தமிழர்கள்படுகொலையை தடுத்த நிறுத்த வேண்டும். அங்கு நடப்பது யுத்தமா? அல்லது இனப் படுகொலையா?
எழுத்தாளர்கள், எம்பிக்கள், அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இந்த சம்பவங்களுக்கு எந்தஎப்ஐஆரும் இல்லை. கேட்டால் அடையாளம் தெரியாதவர்கள் சுட்டதாக அரசு சொல்கிறது. அந்ததுப்பாக்கியாளர்கள் யார்? அவர்களுக்கு ஆயுதம் தந்தது யார்?
ஈழத் தமிழர்களுக்காக முதல் குரல் கொடுத்தவர் கலைஞர் தான். அவர் இந்திய அரசின் இறையாண்மைக்குக்கட்டுப்பட்டு செயல்பட்டு வருகிறார். பூனை வாயில் சிக்கிய மீன் குழம்பாகாது. அதுபோல இந்திய நிவாரணப்பொருட்கள் சிங்கள அரசிடம் கொடுத்தால் அது தமிழர்களுக்குப் போய்ச் சேராது.
ராஜபக்சேவின் பசப்பு வார்த்தைகளில் இந்தியா ஏமாறக் கூடாது. தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ தனித் தமிழ்ஈழம் கிடைக்க வேண்டும் என்றார் வைரமுத்து.
கனிமொழி பேச்சு:
கவிஞர் கனிமொழி பேசுகையில், அரசியல் கட்சிகள் தான் சமுதாயப் பிரச்சனைக்குப் போராட வேண்டும்என்பதல்ல. சமுதாயத்தின் மனசாட்சிகளான படைப்பாளர்களும் போராட வேண்டும்.
எனது இனம், எனது சமுதாயம் ஒடுக்கப்படும்போது அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது.அப்படிப்பட்ட வாழ்க்கையே தேவையில்லை. அரை நூற்றாண்டாக தமிழினம் ஈழத்தில் அழிக்கப்பட்டு வருகிறது.அதை பார்த்து நாம் ஏன் பயந்து கொண்டிருக்க வேண்டும்.
அங்கு அரசே தமிழ் மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது என்றார்.
ராமதாஸ் வீட்டில் கருப்புக் கொடி:
முன்னதாக இலங்கை அதிபர் ராஜபக்ஷே வருகையை எதிர்த்து நேற்று தமிழகம் முழுவதம் கண்டனஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற்றன.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்பட்டது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் போராட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
கட்சி பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
இதேபோல பாமக சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமையில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், ராஜபக்ஷேவே திரும்பிப் போ என்றபதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மெமோரியல் ஹால் அருகே தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பின் சார்பில் கருப்புக் கொடி ஏந்தியபடிஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திண்டிவனத்தில் உள்ள டாக்டர் ராமதாஸின் வீட்டிலும், தைலாபுரம் தோட்ட வீட்டிலும் கருப்புக் கொடிஏற்றப்பட்டு ராஜபக்ஷே வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ராஜபக்ஷே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக, விடுதலைச்சிறுத்தைகள் தவிர பல்வேறு தமிழ் அமைப்புகளும் போராட்டம் நடத்தின.












Click it and Unblock the Notifications