இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜகார்தா: இந்தோனேஷியாவில் மொலுக்கஸ் தீவு அருகே இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்அளவுகோளில் இது 6.1 ஆக பதிவானது.
இந்திய நேரப்படி காலை 7.02 மணிக்கு வடக்கு இந்தோனேஷியாவில் கடலுக்கடியில் இந்த நிலநடுக்கம்ஏற்பட்டது. ஆனால், இதனால் சுனாமி ஏதும் ஏற்படவில்லை.
ராஜஸ்தானில் லேசான நிலநடுக்கம்:
இந் நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்திலும் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.வீடுகள், பள்ளிகள் அதிர்ந்ததால் பொது மக்களும், பள்ளி குழந்தைகளும் அலறியடித்துக் கொண்டு வெளியேஓடினர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு மாணவி பலியானார். சில வீடுகளில் லேசான வெடிப்புகள் தோன்றின.












Click it and Unblock the Notifications