ஆண்டிப்பட்டி தலைவர் தேர்தல் அதிமுக வெற்றி
தேனி:தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.
சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து ஆண்டிப்பட்டி ஊராட்சிஒன்றியத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடந்தது. ஆனால் 2 முறைதேர்தல் நடத்தப்பட்டும் வன்முறை மற்றும் பல்வேறு காரணங்களால் தேர்தல்தள்ளிவைக்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 19 கவுன்சிலர்களில் திமுக 7கவுன்சிலர்களையும், அதிமுக 6, மதிமுக 2 கவுன்சிலர்களையும் கொண்டுள்ளன.
சுயேச்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர். யாருக்கும் பெரும்பான்மைகிடைக்காததால் சுயேச்சைகளின் ஆதரவு பெற்றோர் மட்டுமே தலைவர் மற்றும்துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
இதில் அதிமுகவுக்கு 10 கவுன்சிலர்கள் ஆதரவு இருந்தது. திமுகவுக்கு 9 பேரின்ஆதரவு கிடைத்தது. முதல் முறை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது திமுககவுன்சிலர்கள் யாரும் வரவில்லை. இதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
2வது முறை தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, தேர்தல் நடத்தும் அதிகாரியேவரவில்லை. அவர்களை திமுகவினர் கடத்திச் சென்று விட்டதாக அதிமுக புகார்கூறியது. இதனால் அம்முறையும் தேர்தல் நடத்தப்படவில்லை. இருமுறையும்பெருமளவில் வன்முறையும் மூண்டது. போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தும்அளவுக்கு வன்முறை இருந்தது.
திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால்தான் தேர்தல்ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக குற்றம் சாட்டி வந்தது. இதுதொடர்பாக மதுரைஉயர்நீதிமன்றக் கிளையில் அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கைவிசாரித்த உயர்நீதிமன்றக் கிளை, சரக டிஐஜி மற்றும் உதவி ஆட்சியர் முன்னிலையில்தேர்தலை நடத்த உத்தரவிட்டது.
அதன்படி பலத்த பாதுகாப்புடன் இன்று நடத்த தேர்தலில் அதிமுக சார்பில்போட்டியிட்ட மலர்விழி 10 ஓட்டுக்ள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்டபாளர்பழனியம்மாள் 9 ஓட்டுக்கள் பெற்றார்.
சிவகங்கையில் சுயேட்சை வெற்றி:
இதேபோல சிவகங்கை நகராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலும் இன்றுநடைபெற்றது.
இங்குள்ள நகரசபையில் உள்ள 26 கவுன்சிலர்களில் திமுக சார்பில் போட்டியிட்டமணிமுத்துக்கு 11 பேரின் ஆதரவும், சுயேச்சையாக நிற்கும் முருகனுக்கு 13 பேரின்ஆதரவும் இருந்தது.
இந்நிலையில் இன்று நடந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட முருகன் 15ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட மணிமுத்து 11ஓட்டுகளே பெற்றார்.
இதனை தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications