நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பா?
Subscribe to Oneindia Tamil
டெல்லி:நாடாளுமன்ற நூலகத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியானசெய்தியை பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
நாடாளுமன்ற நூலகத்தில் வெடிகுண்டு போன்ற பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகதனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. ஆனால் இதை நாடாளுமன்றபாதுகாப்பு அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் வெடிகுண்டு பீதி எதுவும் ஏற்படவில்லை. நூலகத்தில்வெடிகுண்டு போன்ற பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுவதிலும் உண்மைஇல்லை.
நாடாளுமன்ற வளாகத்தில் அமைதி நிலவுகிறது. வெடிகுண்டு சோதனைக்காக யாரும்வெளியேற்றப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications