யுஎஸ் சாலைகளை கலக்க போகும் ஸ்கார்பியோ
மும்பை:இந்தியாவின் நவீன ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வெகிக்கிளான ஸ்கார்பியோ கார்கள் விரைவில் அமெரிக்கசாலைகளை ஆக்கிரமிக்கவுள்ளது.
![]() |
மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் தனது மெகா சக்ஸஸ் காரான ஸ்கார்பியோவை அமெரிக்க மார்க்கெட்டில்இறக்கி விட திட்டமிட்டுள்ளது. இதற்காக ஐரோப்பிய கார் ஜாம்பவானான ரெனால்ட்டுடன் கைகோர்க்கவுள்ளதுமகிந்திரா.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஆண்டுக்கு 5 லட்சம் ஸ்கார்பியோ கார்களை ரெனால்ட் தயாரிக்கும். இக்கார்களைஅமெரிக்க மார்க்கெட்டில் மகிந்திரா விற்கும்.
இதுகுறித்து மகிந்திரா நிறுவனத்தின் தலைவரான பவன் கோயங்கா கூறுகையில், ஏற்கனவே ஐரோப்பிய,ஆப்பிரிக்க நாடுகளில் ஸ்கார்பியோ கார்களை விற்றுள்ளோம். எங்களது கார்களுக்கு அங்கு நல்ல வரவேற்புகிடைத்துள்ளது.
![]() |
அமெரிக்காவைப் பொருத்தமட்டில் அங்கு மல்ட்டி யுடிலிட்டி கார்களுக்கும், பிக் அப் ரக வாகனங்களுக்கும்தான்அதிக கிராக்கி உள்ளது. ஆண்டுக்கு 70 லட்சம் கார்கள் வரை அங்கு விற்பனை ஆகின்றன. எனவே எங்களதுதயாரிப்புகளுக்கும் அங்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம்.
எங்களது தயாரிப்புகள் பல நாடுகளில் விற்கப்பட்டாலும் கூட அமெரிக்காவில் விற்பனைக்கு விடுவதைபெருமையாக கருதுகிறோம்.
அமெரிக்க கார் மார்க்கெட்டில் பல்வேறு நாடுகளின் கார்களும் கடும் போட்டியில் முட்டி மோதிக் கொண்டுள்ளன.ஜப்பானின் ஹோண்டா, டயோடா கார்களிடம் சிக்கி அமெரிக்காவின் போர்ட், ஜெனரல் மோட்டர்ஸ் ஆகியவைதிணறி வருகின்றன.
இந் நிலையில் நம் நாட்டின் ஸ்கார்பியோவும் அங்கு காலடி வைக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்














Click it and Unblock the Notifications