சட்டசபையை சூறையாடிய எம்.எல்.ஏக்கள்!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா:மேற்கு வங்க மாநில சட்டசபையை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் சூறையாடியசம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது 1 லட்சம் ரூபாய் கார் தயாரிப்புக்காக மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளிஅருகே விவசாய நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்தது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்புதெரிவித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

இரு கட்சிகளும் சிங்குர் நகரில் ஊர்வலம் நடத்த நேற்று அழைப்பு விடுத்திருந்தன. ஆனால் ஊர்வலமோ,போராட்டமோ நடத்தக் கூடாது என போலீஸ் தடை விதித்தது. ஆனால் தடையை மீறி மம்தா பானர்ஜிதலைமையில் அவரது கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர்.

இதையடுத்து மம்தா பானர்ஜியை போலீஸார் நடுவழியில் தடுத்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி கொல்கத்தாவுக்குகொண்டு வந்தனர். அப்போது அவரை போலீஸார் தாக்கியதாக செய்தி பரவியது.

இதனால் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஆத்திரமடைந்தனர். அதேசமயம், மம்தா நேராக சட்டசபைக்குவந்தார். வெளியில் நின்று கொண்டு ஆவேசமாக கம்யூனிஸ்ட் அரசை எதிர்த்து கோஷமிட்டார். அவரது கட்சிஎம்.எல்.ஏக்கள் கொதிப்புடன் சட்டசபை வளாகத்தை சூறையாட ஆரம்பித்தனர்.

உள்ளே நுழைந்த அவர்கள் அங்கிருந்த மைக்குகளைப் பிடுங்கி உடைத்து எறிந்தனர். மேசை, நாற்காலிகளையும்ஆவேசமாக உடைத்தனர். சில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்களையும் அவர்கள் கடுமையாகதாக்கினர். தடுக்க வந்த அவைக் காவலர்களையும் அடித்து உதைத்தனர்.

சட்டசபை குறிப்பேடுகளைக் கிழித்து எறிந்தனர். இதனால் சபையே போர்க்களம் போல மாறியது. எங்குபார்த்தாலும் உடைந்த நாற்காலிகளும், மேசைகளுமாக காணப்பட்டது.

இந்த வன்முறைச் சம்பவத்தில் 6 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள், திரிணாமுல் காங்கிரஸ்எம்.எல்.ஏக்கள் 3 பேர், 2 அவைக் காவலர்கள், 2 பத்திரிகைப் புகைப்படக்காரர்கள் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்திற்கு முதல்வர் புத்ததேவ் பட்டசார்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வன்முறை காரணமாகசுமார் முக்கால் மணி நேரத்திற்கு சபை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் சபை கூடியபோது திரிணாமுல்எம்.எல்.ஏக்கள் யாரும் வரவில்லை.

அவர்கள் சட்டசபை வளாகத்தில் கூடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 12 மணி நேர பந்த் நடத்தவும்அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கிடையே, மம்தா கட்சியினரால் சூறையாடப்பட்ட சட்டசபையை பொதுமக்கள் பார்வையிட சபாநாயகர்ஹாலீம் அறிவித்துள்ளார். இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வந்து சட்டசபையைசூறையாடியதைப் பார்க்கலாம் என அவர் அறிவித்துள்ளார். மம்தா கட்சியினரால் சூறையாடப்பட்ட பொருட்கள்அப்படியே இருக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநில சட்டசபை வரலாற்றில் இதுபோன்ற வன்முறைச் சம்பவம் நடந்ததில்லை என அம்மாநிலபத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+