கொலை வழக்கில் சித்து குற்றவாளி-பதவி விலகல்
சண்டிகர்:பாட்டியாலாவில் கடந்த 1989ம் ஆண்டு காரை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில்ஒருவரைக் கொலை செய்த வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜகஎம்.பியுமான நவ்ஜோத் சிங் சித்து குற்றவாளி என பஞ்சாப்-ஹரியாணாஉயர்நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
சித்து கிரிக்கெட் வீரராக இருந்தபோது, 1989ம் ஆண்டு பாட்டியாலா நகரில் காரைநிறுத்துவது தொடர்பாக குர்னாம் சிங் என்பவருடன் தகராறு ஏற்பட்டது. இதையடுத்துசித்துவும் அவரது நண்பர்களும் சேர்ந்து குர்னாம் சிங்கை கடுமையாக தாக்கினர்.
படுகாயமடைந்த குர்னாம் சிங் மருத்துவமனையில் மரணமடைந்தார்.
இதைத் தொடர்ந்து சித்து மீதான தாக்குதல் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த பாட்டியாலா நீதிமன்றம் கடந்த 1999ம் ஆண்டு சித்துவைவிடுதலை செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பஞ்சாப் அரசு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்தமனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சித்து குற்றவாளி என இன்று தீர்ப்பளித்தது.அவருக்கான தண்டனை குறித்த விவரம் புதன்கிழமை அறிவிக்கப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்புதான் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், மத்தியஅமைச்சராக இருந்தவருமான சிபு சோரன் கொலை வழக்கில் குற்றவாளி எனதீர்ப்பளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந் நிலையில் சித்து கொலைக் குற்றவாளி என தீர்ப்பு வெளியாகியுள்ளது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிபு சோரனின் கைதை வைத்து மத்திய அரசைத் தாக்கியும், நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்தும் வந்தபாஜகவை சித்து மீதான தீர்ப்பு பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சித்து கொலைக் குற்றவாளி என்ற தீர்ப்பு குறித்து பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் கருத்து கேட்டபோது, பதில்சொல்ல அவர் மறுத்துவிட்டு எஸ்கேப் ஆனார்.
இந் நிலையில் ஜெயிலுக்குப் போக ரெடியாகும் சித்து தனது எம்பி பதவியை ராஜினாமா செய்து பாஜகதலைமைக்கு கடிதம் அனுப்பிவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications