பாமக-காங் அம்மா பக்கம் வரும்-எஸ்விசேகர்
ஈரோடு:திமுக கூட்டணியில் கடும் அதிருப்தியுடன் உள்ள காங்கிரஸும், பாமகவும் விரைவில்அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என அதிமுக எம்.எல்.ஏவான காமெடியன்எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
ஈரோட்டில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு கஜானாவை கருணாநிதிகாலி செய்ய ஆரம்பித்துள்ளார். மக்களுக்கு சலுகைகளை வழங்குகிறோம் என்றபெயரில் இந்த வேலையை அவர் செய்து வருகிறார்.
ஆனால் மக்களுக்கு இந்த அரசு மீது நம்பிக்கை போய் விட்டது. கஜானாவைக் காலிசெய்து வரும் கருணாநிதி எப்படி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தரப் போகிறார்என்று தெரியவில்லை.
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாறும். அது தமிழ்ப் புத்தாண்டு நாளாகக் கூடஇருக்கலாம். காங்கிரஸும், பாமகவும் திமுக மீது கடும் அதிருப்தியில் உள்ளன. இந்தஇரு கட்சிகளும் விரைவில் விலகி அதிமுகவுடன் கூட்டணி வைக்கும்.
சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தல் முறையாக நடத்தப்பட்டிருந்தால் 155வார்டுகளில் 120 வார்டுகளைப் பிடித்திருக்கும். அரசு விழாக்களில் அதிமுகஎம்.எல்.ஏக்களைப் புறக்கணிக்கிறார்கள், உரிய மரியாதை கிடைப்பதில்லை.
டிவி தொடர்கள்தான் வன்முறைச் சம்பவங்கள் அதிகமாக நடக்க முக்கியக் காரணம்.சினிமாவை விட தொலைக்காட்சி நாடகங்களுக்குத்தான் அதிகம் சென்சார்தேவைப்படுகிறது என்றார் சேகர்.












Click it and Unblock the Notifications