நாளை தமிழக சட்டசபை கூடுகிறது
சென்னை:தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.
குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளான நாளை முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவுக்கு இரங்கல்தெரிவிக்கப்படும். இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் சபை ஒத்திவைக்கப்படும்.
பின்னர் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூடி சபையை எத்தனை நாட்களுக்குநடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
குளிர்காலக் கூட்டத் தொடர் என்பதால், இந்த தொடர் குறுகிய காலத்திற்கு நடத்தப்படுவதாக அமையும்.இக்கூட்டத் தொடரில், வாட் மசோதாவை தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இதுபோல கூட்டுறவுத் தேர்தல், இலவச சமையஸ் கேஸ் அடுப்புத் திட்டம், மழை வெள்ள நிவாரண உதவிஉள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் வன்முறை, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகளைக் கிளப்பிசட்டசபையில் புயலை எழுப்ப அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளதால், இந்தக் கூட்டத் தொடர்படு சூடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சட்டசபையில் முதல்வர் விளக்கம் அளிக்கக் கூடும்.அதேபோல கேரளாவைக் கண்டித்து தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல, உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக தமிழை அறிவிப்பது தொடர்பாகவும் சூடான விவாதம் இடம்பெறக் கூடும். இதுதொடர்பான சட்ட மசோதாவும் சபையில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications