திருவண்ணாமலை மகா தீபத் திருவிழா

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று மகா தீபம் ஏற்பட்டது.

மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் ஏற்றப்பட்ட இந்த தீபத்தை சுமார் 15 லட்சம் பக்தர்கள் தரிசனம்செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 24ம் தேதியன்றுகொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடந்த இந்த விழாவில் 7ம் நாளில் மகாதேரோட்டம் வெகுவிமர்சையாக நடந்து முடிந்தது.

பத்தாம் நாளான நேற்று மகா தீப விழா நடைபெற்றது. மகா தீப தரிசனத்தை காண தமிழகம் மற்றும் நாடுமுழுவதும் இருந்து 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டனர்.

அண்ணாமலையார் கோயிலில் நேற்று மாலை 5.15 மணியளவில் விநாயகர், சுப்பிரமணியர், அண்ணாமலையார்,பராசக்தியம்மன், சண்டிகேசுவரர் ஆகியோர் கோயில் கொடிமரத்தின் முன் அலங்கார ரூபத்தில் பக்தர்களுக்குஅருள் காட்சியளித்தனர்.

பின்னர் மாலை 5.59 மணிக்கு அர்த்தநாரீசுவரர் அருள்காட்சி அளித்தார். இதையடுத்து 6 மணிக்கு அகண்ட தீபம்ஏற்றப்பட்டது. இதையடுத்து 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்குகூடியிருந்து 15 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் மகாதீபத்தை கண்டு மகிழ்ந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+