தேசிய அளவில் கூட்டணிகள் மாறும்: ஜெயலலிதா
டெல்லி:தேசிய அளவிலுவும் மாநில அளவிலும் விரைவில் கூட்டணிகள் மாறும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாகூறினார்.
![]() |
மக்களவைத் தேர்தலில் தோற்றது முதல் கடந்த இரு ஆண்டுகளாக ஜெயலலிதா இந்தக் கருத்தை தெரிவித்துவருகிறார். குறிப்பாக டெல்லிக்குப் போகும்போது நிருபர்களிடம் இதைச் சொல்ல அவர் தவறுவதில்லை.
அந்த வகையில் இன்று எம்ஜிஆர் சிலை திறப்பு முடிந்த பின் நிருபர்களிடம் பேசுகையில்,
கூட்டணிகளில் தேசிய, மாநில அளவில் மாற்றம் ஏற்படும். ஆனால், அது குறித்து மேலும் ஏதும் கூற முடியாது.கருணாநிதி-அச்சுதானந்தன் இடையிலான முல்லைப் பெரியாறு பேச்சுவார்த்தை தோற்றவுடனே உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடியிருக்க வேண்டும்.
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா இன்னும் நிறைவேறாமல் இருப்பது கொடுமையான விஷயம்.
உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் தலைமையிலான அரசைக் கலைக்க மத்திய அரசு முயல்வதுகண்டிக்கத்தக்கது. மத்திய அரசு அந்தத் தவறைச் செய்தால் அம் மாநிலத்தில் பெரும் மெஜாரிட்டியோடு முலாயம்மீண்டும் வெல்வார்.
பாரத ரத்னா எம்ஜிஆரின் திருவுருவச் சிலை திறப்பு நிகழ்ச்சியை திமுக புறக்கணித்துள்ளது கண்டனத்துக்குரியதுஎன்றார் ஜெயலலிதா.
இந்த நிகழ்ச்சிக்கு சோனியா வராதது ஏன் என்று நிருபர்கள் கேட்டபோது, அதை அவரிடமே கேளுங்கள் என்றுகூறிவிட்டுச் சென்றார் ஜெயலலிதா.
காங்கிரஸை எதிரியாகக் கருதவில்லை என முன்னதாக டெல்லியில் ஜெயலலிதா கூறியது குறிப்பிடத்தத்தது.மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் காங்கிரஸை நெருங்க ஜெயலலிதா பல வகைகளிலும் முயன்றுவந்தாலும் இதுவரை சோனியா பிடி கொடுக்கவில்லை.
இதற்காக பாஜகவிடம் இருந்து ஜெயலலிதா விலகி இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதுவரைஜெயலலிதாவுடன் தேசிய அளவில் இணைந்து மூன்றாவது அணி அமைக்க முலாயம் மட்டுமே முன்வந்துள்ளார்.













Click it and Unblock the Notifications