சிவப்பு சேலையால் ரயிலை நிறுத்திய பாட்டி!
வாணியம்பாடி:வாணியம்பாடி அருகே தண்டவாளத்தில் பிளவு ஏற்பட்டிருந்ததைப் பார்த்த பாட்டி தான் அணிந்திருந்த சிவப்புவண்ண சேலையை காட்டி ரயிலை நிறுத்தினார்.
மாராபட்டு என்ற இடத்தில் சுரேஷ், தினகரன் ஆகியோர் இன்று காலை தண்டவாளம் பக்கமாக நடந்துசென்றபோது அதில் பிளவு ஏற்பட்டிருப்பதைக் கண்டனர். அந்த நேரத்தில் தூரத்தில் திருவனந்தபுரம் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது.
என்ன செய்வது என்று தெரியாமல் அந்த இளைஞர்கள் தவித்தபோது அந்த வழியாக சிவப்பு சேலை அணிந்தராணி (வயது 63) என்ற முதிய பெண் வந்தார். அவரிடம் விஷயத்தைக் கூறியவுடன், உடனே தனது சேலையைகாட்டியபடி தண்டவாளத்தின் அருகே ரயில் வரும் திசையில் ஓடினார்.
இதைப் பார்த்த என்ஜினின் டிரைவர் ஏதோ விபரீதம் ஏற்பட்டுள்ளதை உணர்ந்து ரயிலை அவசரமாக நிறுத்தினார்.இதையடுத்து அந்த வழியாக வந்த எல்லா ரயில்களும் நிறுத்தப்பட்டன.
ரயிலை நிறுத்த பாட்டிக்கும், அந்த இளைஞர்களுக்கும் ரயில் டிரைவரும் பயணிகளும் நன்றி தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications