For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை-ஆண்டனியிடம் கருணாநிதி கேள்வி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் இருந்து வெடி மருந்துகள் அனுப்பப்பட்டது குறித்து பாதுகாப்புத்துறைஅமைச்சர் அந்தோணி, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் முதல்வர் கருணாநிதி கேள்விஎழுப்பியுள்ளார்.

இலங்கை கடற்படைக்கு, மகாராஷ்டிர மாநிலம் நாக்பரிலிருந்து வெடிபொருட்களைஏற்றிக் கொண்டு வந்த லாரியை மதுரை அருகே போலீஸார் மடக்கினர். ஆனால் உரியஆவணங்களுடன் அந்த வெடிபொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதால், போலீஸார்அதை அனுமதித்தனர்.

தூத்துக்குடியிலிருந்து கடல் மார்க்கமாக இந்த வெடிபொருட்கள் இலங்கைக்குஎடுத்துச் செல்லப்படுவதாகவும் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் உள்ள ரக்சமா-வல்சாரா கடற்படை வெடிபொருள் கிடங்கின்முகவரிக்கு இந்த வெடிபொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இலங்கைக்கு இந்தியா எந்த ராணுவ உதவியும் செய்யாது என பிரதமர் மன்மோகன் சிங்கும் வெளியுறவுஅமைச்சர் பிரணாப் முகர்ஜியும் தமிழக முதல்வர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டதலைவர்களிடம் உறுதியளித்த நிலையில் இந்த வெடிகுண்டுகள் பிடிபட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமரையும் பாதுகாப்பு அமைச்சரையும் மீறி வெளியுறவு, பாதுகாப்புத்துறை மற்றும் மத்திய உளவுப் பிரிவினர்இலங்கைக்கு உதவிகளை செய்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. கேரளத்தைச் சேர்ந்தர்களான தேசியபாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் ஆகியோருக்குத்தெரியாமல் இந்த ஆயுத சப்ளை நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் வைகோ, ராமதாஸ், நெடுமாறன்உள்ளிட்டோர் இது குறித்து கண்னட அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து வெளியுறவுத்துத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடமும் பாதுகாப்பு அமைச்சர்அந்தோணியிடமும் கருணாநிதி பேசியுள்ளார்.

இந் நிலையில் இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை கடற்படைக்கு வெடி பொருட்களை இந்தியாவில் இருந்து கொண்டு செல்ல அனுமதிஅளித்திருப்பதாகவும், இது வேதனை அளிப்பதாகவும் தமிழக தலைவர்கள் சிலர் அதிர்ச்சியுடன் அறிக்கைவிட்டுள்ளனர்.

இதையடுத்து டெல்லியில் இருந்த முதல்வர் கருணாநிதி உடனடியாக அமைச்சர் தயாநிதி மாறன் மூலமாக நேற்றேவெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் விசாரிக்கக் கூறியிருந்தார். அவரும் உடனடியாகமுகர்ஜியிடம் பேசினார்.

அப்போது எனது அமைச்சகம் மூலம் அப்படி அதிகாரப்பூர்வமாக எந்த ஆணையும் பிறப்பிக்கவில்லை,இருந்தாலும் இது குறித்து உடனே விசாரிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணியிடமும் இது குறித்து கருணாநிதி நேரில்விசாரித்தபோது, அப்படி ஏதும் அனுமதி வழங்கவில்லை என்றும், விசாரணை நடத்துவதாகவும் அந்தோணிதெரிவித்தார்.

வியாபாரரீதியாக அரசுக்குத் தெரியாமல் ஏதாவது நடந்திருக்குமா என்பது குறித்து விசாரிக்குமாறு தமிழக காவல்துறைக்கு கருணாநிதி உத்தரவிட்டுள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராமதாஸ் கண்டனம்:

இதுதொடர்பாக ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:

இலங்கையில் தமிழ் மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை மோசமான அளவில் தொடர்வது குறித்து கவலை தெரிவிக்கும்தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே நாளில் இலங்கை கடற்படைக்காக வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற லாரியை மதுரை அருகேகாவல்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, பின்னர் உரிய ஆவணங்கள் இருந்ததால் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிகழ்வு நடந்துள்ளது.

இது தமிழக மக்களின் கவலையை மேலும் அதிகரிக்கச் செய்வதாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து வரும்இலங்கை ராணுவத்திற்கு எத்தகைய உதவியையும் இந்தியா வழங்கக் கூடாது என ஒட்டுமொத்த தமிழகமும் குரல் கொடுத்து வருகிறது.

ஆனாலும் அண்மையில் இந்தியா வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே, தளவாடங்கள் அல்லாத பிற ராணுவத் தேவைகளை நிறைவு செய்யமுன்வந்திருப்பதாகவும், ஏற்கனவே இத்தகைய உதவிகளைப் பெற்றுக் கொண்டு வருவதாகவும் கூறி விட்டுச் சென்றிருக்கிறார்.

இலங்கைக்கு வெடிபொருள் எடுத்துச் செல்லப்பட இருந்த வெடிபொருட்கள் மதுரை அருகே பிடிபட்டுள்ள நிகழ்வு இலங்கை அதிபரின் கூற்றை உறுதிப்படுத்தும்வகையில் இருக்கிறது.

இலங்கை ராணுவத்திற்கு எத்தகைய உதவி வழங்கினாலும் அது ஈழத் தமிழர்களைக் கொன்று குவிப்பதற்குத்தான் பயன்படுத்தப்படும். ஈழத் தமிழர்களைக்காப்பாற்றுங்கள் என்று தமிழக மக்கள் குரல் எழுப்பி வரும் நிலையில் அவர்களை மேலும் கொன்று குவிப்பதற்கு உதவும் வகையில், இலங்கைகடற்படைக்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல அனுமதித்திருப்பது வேதனை அளிக்கிறது.

தங்களது உணர்வுகளுக்கு இந்திய அரசு மதிப்பு அளிக்கவில்லையோ என்கிற சந்தேகத்தை தமிழக மக்களிடையே இது ஏற்படுத்தி விடும். ஆபத்தான இந்தப்போக்கு தவிர்க்கப்பட வேண்டும். எனவே இலங்கைக்கு உதவும் இதுபோன்ற நடவடிக்கைகளை இந்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். அதன்மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம் என்பதை உணர்த்த முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

நெடுமாறன் கண்டனம்:

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனும் இலங்கை கடற்படைக்கு வெடிபொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு இந்தியாவிலிருந்து வெடிபொருட்கள் அனுப்பப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி தருகிறது. இந்தநிலை தொடர்ந்தால் இந்திய அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இலங்கைக்கு வெடிபொருள் அனுப்பப்பட்டுள்ள விவகாரம் தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இலங்கைக்கு ஆயுத உதவி செய்யமாட்டோம் என பிரதமர் மன்மோகன் சிங் திரும்பத் திரும்ப உறுதி கூறியுள்ள நிலையில் எப்படி இந்த வெடிபொருட்கள் வினியோகம் நடந்தது என்பதுதெரியவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசு நடந்து கொண்ட விதம் அதன் இரட்டை நிலையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

இந்த வெடிபொருட்களை தமிழக காவல்துறை பறிமுதல் செய்யாமல் அதை தொடர்ந்து செல்ல அனுமதித்திருப்பது அதை விட அதிர்ச்சியூட்டும் செயலாகஉள்ளது. சட்டசபையில் இலங்கை விவகாரம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே நாளில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வெடிபொருட்கள்அனுப்பப்பட்டிருப்பது வெட்கக்கேடான செயலாகும்.

ஈழத்தில் உள்ள தமிழர்களைக் கொல்ல இந்தியாவிலிருந்தே வெடிபொருட்கள் சென்றிருப்பது மிகவும் கண்டனத்துக்குரிய செயலாகும் என்று கூறியுள்ளார்நெடுமாறன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X