For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அபார்ட்மென்டில் அலம்பல்: மாயா மீது வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

Mayaசென்னைதான் குடியிருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள குடிநீர்க் குழாய்களின் இணைப்புகளை துண்டித்தும்,குடியிருப்பவர்களிடம் ரகளை செய்தும் கலாட்டா செய்ததாக நடிகை மாயாவின் மகனை போலீஸார் கைதுசெய்தனர். மாயா மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகி விட்ட அவரைப் பிடிக்க போலீஸார்வலை வீசியுள்ளனர்.

முன்னாள் உலுக்கல் நடிகை மாயா, வடபழனியில் உள்ள பிரகாஷ் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறார்.இங்கு குடியிருப்போர் இணைந்து ஒரு நலச் சங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். குடியிருப்பை பராமரிப்பதற்காகமாதந்தோறும் அனைவரும் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைக் கட்ட வேண்டும்.

ஆனால் இதை கட்ட முடியாது என மாயா தகராறு செய்துள்ளார். கிட்டத்தட்ட ரூ. 5000 வரைக்கும் கட்டணப்பாக்கியை அவர் வைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் பொறுமை இழந்த குடியிருப்போர் நலச் சங்கத்தினர்,மாயா வீட்டு குடிநீர் இணைப்பைத் துண்டித்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மாயாவும், அவரது மகன்விக்னேஷும், குடியிருப்பில் கலாட்டாவில் இறங்கினர்.

Babylonaஇதுகுறித்து வடபழனி போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தி இருதரப்பையும் சமாதானப்படுத்தினர். இனிமேல் தகராறு செய்யக் கூடாது என மாயாவுக்கும், விக்னேஷுக்கும்எச்சரிக்கை செய்து சென்றனர்.

ஆனால் அவர்கள் போன பின்னர் தங்களுக்கு இல்லாத குடிநீர் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று கூறிபிற வீடுகளுக்குச் செல்லும் குடிநீர் இணைப்புகளை மாயாவும், விக்னேஷும் சேர்ந்து துண்டித்துள்ளனர்.அத்தோடு வாய்க்கு வந்த கெட்ட வார்த்தையையெல்லாம் எடுத்து விட்டு தகராறு செய்துள்ளனர்.

இதையடுத்து மீண்டும் வடபழனி போலீஸாருக்கு புகார் போனது. இந்த முறை கோபமடைந்த போலீஸார் மாயாமற்றும் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்து விரைந்து வந்தனர். விக்னேஷ் மட்டுமே போலீஸ் பிடியில்சிக்கினார். அவரை போலீஸார் கைது செய்தனர். மாயா தலைமறைவாகி விட்டார்.

மாயா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மத்திய அமைச்சர் ஒருவர் மூலம் கைதிலிருந்து தப்பிக்கமுயற்சித்தாராம். அந்த அமைச்சரும், போலீஸாரைத் தொடர்பு கொண்டு விட்டு விடுமாறு கூறியுள்ளார். ஆனால்அதை போலீஸார் நிராகரித்து விட்டனராம்.

இதேபோல மாயாவின் தங்கச்சி மகளான கவர்ச்சி சுந்தரி பாபிலோனாவும், தனது சித்திக்காகப் பரிந்து பேசிவடபழனி போலீஸாரிடம் சித்தியைக் கைது செய்யாதீங்க என்று கூறியுள்ளார். இன்னும் கொஞ்ச நேரம் நின்றால்உங்களையும் தூக்கி உள்ளே போட்டு விடுவோம் என போலீஸார் மிரட்டியதால் பாபிலோனா தெறித்து ஓடிவிட்டாராம்.

மாயாவை விரைவில் கைது செய்வோம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். சர்ச்சைகளுக்கும் மாயாவுக்கும்நெருங்கிய தொடர்பு. அடிக்கடி ஏதாவது ஒரு சலசலப்பில் சிக்கிக் கொள்வது அவரது வாடிக்கை. காங்கிரஸ்கட்சியில் தன்னை உறுப்பினராக கூறிக் கொள்ளும் மாயா சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் கூட சீட்கேட்டார். ஆனால் கொடுக்கத்தான் அங்கு யாரும் இல்லை.

போலீஸ் மீது பாபிலோனா புகார்:

இதற்கிடையில் போலீஸ் ஒரு தலைபட்சமாக செயல்படுகின்றனர் என பாபிலோனா கமிஷனர் அலுவலகத்தில்புகார் ஒன்று கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பாபிலோனாவும், அவரது பாட்டியும்-மாயாவின் தாயாருமான கிருஷ்ணவேணி கமிஷனரிடம்கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது,

எனது மகள் இருக்கும் குடியிருப்பில் செல்போன் டவர் வைக்க குடியிருப்பு சங்கம் முடிவு செய்தது. இதற்கு மாயாஎதிர்ப்பு தெரிவித்தார். இந்த முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு அவர் மீது குடிநீர் குழாயைதுண்டித்ததாக குடியிருப்போர் நலச் சங்கத்தினர் பொய்யான புகார் கொடுத்துள்ளனர். எனது பேரன் விக்னேசைபோலீசார் அடித்து இழுத்து சென்றனர்.

உண்மை நிலையை சொல்வதற்காக நான் வடபழனி காவல் நியைத்திற்கு சென்றேன். ரூ.20 ஆயிரம் கொடுத்தால்வழக்கில் இருந்து விட்டு விடுவதாக இன்ஸ்பெக்டரும், சப் இன்ஸ்பெக்டரும் கூறினார்கள். நான் மறுப்புதெரிவித்ததால் என்னை ஆபாசமாக திட்டி கையை முறுக்கி வெளியே தள்ளி விட்டனர். சம்பந்தப்ட்டஅதிகாரிகள் மீதும், புகார் கொடுத்த குடியிருப்போர் நலச் சங்கத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஅதில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகை பாபிலோனா நிருபர்களிடம் கூறியதாவது,

நான் உண்டு என் வேலையுண்டு என்று இருக்கிறேன். என் மீது வீணான பழி சுமத்தப்பட்டுள்ளது. காவல்நிலையத்திற்கு சென்று கலாட்டா செய்ததாக கூறி இருக்கிறார்கள். காவல் நிலையத்திற்கு நான் செல்லவும் இல்லை.போலீசாரை மிரட்டவும் இல்லை. பாட்டி மட்டும் தான் காவல் நிலைத்திற்குக்கு சென்றார்.

அவரை ஒரு நோயாளி என்று கூட பார்க்காமல் போலீசார் அவரை கீழே தள்ளியுள்ளனர். இந்த புகாருக்குசம்பந்தமே இல்லாத விக்னேஷ் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கண்டிக்க தக்கது.பழி வாங்கும் நடவடிக்கை. மாயா தப்பி ஓடி விட்டார் என்று கூறுகிறார்கள். அவர் தப்பி ஓட அவர் என்னவிரப்பனா?. இந்த விவகாரத்தில் போலீசார் ஒரு தலைப் பட்சமாக செயல்படுகிறார்கள். எனது பாட்டிக்கு ஏற்பட்டநிலைமையை சொல்வதற்காக தான் அவருடன் வந்து புகார் கொடுத்தேன் என அவர் கூறினார்.

இதே போல மாயா வசிக்கும் குடியிருப்பை சேர்ந்த பெண்களும் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார்கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது,

விக்னேஷ் குடியிருப்பில் தனியாக இருக்கும் பெண்களிடம் கிண்டல் செய்வார். தட்டிக்கேட்டால் தனது தாயார்மாயாவுடன் சேர்ந்து கொலை செய்து விடுவதாக மிரட்டுவார் குடியிருப்பில் நாங்கள் இருக்க பயப்படுகிறோம்.மாயாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X