பிரேமானந்தா சொத்து ரூ4.7 கோடிக்கு ஏலம்!
திருச்சி:திருச்சியில் உள்ள பிரேமானந்தாவின் சொத்துக்கள் இன்று பகிரங்க ஏலம்விடப்பட்டன. திருசெங்கோட்டை சேர்ந்த ஒருவர் இந்த சொத்துக்களை ரூ. 4.70கோடிக்கு ஏலத்ததில் எடுத்தார்.
![]() |
எடமலைப்பட்டி புதூர் அருகே பாத்திமா நகரில் ஆசிரமம் நடத்தி வந்தவர்இலங்கையைச் சேர்ந்த போலிச் சாமியார் பிரேமானந்தா.
அங்குள்ள அனாதை ஆசிரமப் பள்ளிகளை கற்பழித்தது, சிறுமியருடன் செக்ஸ்,என்ஜினியர் ஒருவர் உள்பட பல கொலைகள் என கிரிமினல்தனத்துக்கு பேர் போனபிரேமானந்தா திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் ஏகப்பட்ட பக்தர்களை, குறிப்பாக பெண்கள், கொண்ட பிரேம்ஸ்இப்போது இரட்டை ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
![]() |
மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்த கோடிக்கணக்கான பணத்துக்கு கணக்கு,வழக்கு தாக்கல் செய்யாமல் இருந்தார் பிரேமானந்தா. இதையடுத்து இவரது ஆசிரமம்உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போதுகோடிக்கணக்கில் வரி மோசடியும் மற்றும் அன்னிய செலவாணி மோசடி நடந்துள்ளதுதெரியவந்தது.
![]() |
ரூ. 10 கோடி அளவுக்கு வருமான வரி நிலுவையில் உள்ளது தெரியவந்ததால்அவருக்குச் சொந்தமான 26 கட்டடங்கள் மற்றும் 106 ஏக்கர் நிலம் உள்ளிட்டசொத்துக்கள் வருமான வரித்துறையால் கையகப்படுத்தப்பட்டன.
இன்று இந்தச் சொத்துக்கள் பகிரங்க ஏலம் விடப்பட்டன. திருச்சி வருமானவரித்துறைஅலுவலகத்தில் இந்த ஏலம் நடந்தது.
![]() |
ஏலம் எடுக்க கூடியவர்களை விட அதை வேடிக்கை பார்க்க நூற்றுக்கணக்கானவர்கள்திரண்டுவிட்டனர். இதனால் வருமான வரித்துறை அலுவலகமே ஜேஜே என களைகட்டியிருந்தது.
பிரேம்ஸிசின் சொத்துக்களின் ஏலத்திற்கான குறைந்தபட்ச தொகையாக ரூ. 2.21கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதில் திருசெங்கோட்டை சேர்ந்த விஜயகுமார் என்பவர் பிரேமானந்தாவின்சொத்துக்களை ரூ. 4.70 கோடிக்கு ஏலத்ததில் எடுத்தார்.
















Click it and Unblock the Notifications