விபத்தில்தான் இறந்தார் இளவரசி டயானா
லண்டன்:இளவரசி டயானா சாலை விபத்தில்தான் இறந்தார். அவரது மரணத்தில் எந்த மர்மமும்இல்லை என்று இதுகுறித்து விசாரணை செய்த கமிஷன் தலைவர் ஜான் ஸ்டீவன்ஸ்தெரிவித்துள்ளார்.
கடந்த 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சுரங்கப்பாதையில் தனது காதலர் டோடி அல் பயத்துடன் சென்ற டயானாவின் கார் விபத்தில்சிக்கியது. இதில் டயானா, பயத் உள்ளிட்டோர் மரணமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு முன்பே 1992ம் ஆண்டிலேயே இளவரசர் சார்லஸை விட்டுடயானா பிரிந்து விட்டார். விவாகரத்து செய்த பின்னர்தான் பயத்துடன் டயானாவுக்குப்பழக்கம் ஏற்பட்டது.
டயானாவின் காரை பத்திரிக்கைப் புகைப்படக்காரர்கள் விரட்டிச் சென்றதால் விபத்துஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் டயானாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகசர்ச்சை எழுந்தது.
சார்லஸை விட்டு விட்டு பயத்துடன் சேர்ந்து சுற்றியதால் அதிருப்தி அடைந்த அரசகுடும்பத்தினர் சதி செய்திருக்கலாம், இங்கிலாந்து உளவுப் பிரிவினர் சதி செய்துகொன்றிருக்கலாம் என சர்ச்சை கிளம்பியது.
மேலும் சார்லஸின் தந்தை எடின்பரோ கோமகன்தான், இங்கிலாந்து உளவுப்பிரிவினரை தூண்டி விட்டு தனது மகனைக் கொலை செய்ய உத்தரவிட்டார் என டோடிஅல் பயத்தின் தந்தை முகம்மது அல் பயத்தும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து டயானாவின் மரணம் குறித்து விசாரிக்க கடந்த 2004ம் ஆண்டுஉத்தரவிடப்பட்டது. முன்னாள் காவல்துறை தலைவர் ஜான் ஸ்டீவன்ஸ்தலைமையிலான குழு விசாரணையைத் தொடங்கியது. இளவரசர் சார்லஸ், அவரதுமகன்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையின் விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. இதுகுறித்து ஸ்டீவன்ஸ்கூறுகையில், டயானாவின் மரணத்தில் எந்த சதிச் செயலும் இல்லை. அவர் கார்விபத்தில்தான் மரணமடைந்துள்ளார் என்பது ஆதாரப் பூர்வமாக தெரிய வந்துள்ளது.
அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறப்பட்ட புகாரில் உண்மை இல்லை.டயானாவின் காரை ஓட்டிய நபர் போதையில் இருந்துள்ளார். அதனால் நிதானம்இல்லாமல் காரை செலுத்தியுள்ளார். மேலும், பத்திரிக்கை புகைப்படக்காரர்களின்துரத்தலால் பயந்து போய் காரை தாறுமாறாக ஓட்டியதில் கார்விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் அரச குடும்பத்துக்கும், இளவரசர் சார்லஸுக்கும், இங்கிலாந்துஉளவுப் பிரிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
டயானா விபத்தில் இறந்தபோது அவர் கர்ப்பமாக இருந்தார் என்று கூறப்பட்டதகவலும் சரியல்ல, அவர் கர்ப்பமாக இல்லை. அதேபோல டோடி பயத்துக்கும்,டயானாவுக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் எதுவும் நடந்ததாக தெரியவில்லைஎன்றார் ஸ்டீவன்ஸ்.
கிட்டத்தட்ட 900 பக்கங்கள் கொண்டதாக விசாரணை அறிக்கை உள்ளது. கடந்த 3ஆண்டுகளாக நடந்து வந்த இந்த விசாரணை மூலம், டயானா மரண சர்ச்சைக்குமுற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புள்ளி இத்தோடு முடிந்து விடுமா அல்லது ‘கமா’ ஆகி வேறு ஏதாவது சர்ச்சைகிளம்புமா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications