For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலை தூக்கும் மத மோதல்கள்: பாஜக கவலை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:தமிழகத்தில் சமீப காலமாக அடங்கியிருந்த மதக் கலவரங்கள் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது கவலைதருவதாக தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று இல.கணேசன் பேசுகையில், நெல்லை மாவட்டம் தென்காசியில் இந்துமுன்னணி தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.

சிறிது காலமாக மறைந்திருந்த மத ரீதியிலான மோதல்கள் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்திருப்பது கவலைதருகிறது. இந்து முன்னணித் தலைவரை கொலை செய்த உண்மைக் குற்றவாளிகைள போலீஸார் கைது செய்துநியாயமான விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும்.

ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை வைக்கக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் அது நிறுவப்பட தேர்வுசெய்த இடம்தான் தவறு என்கிறோம்.

பதட்டத்தை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டுத்தான் திராவிடர் கழகம் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தைதேர்வு செய்துள்ளது. பெரியார் சிலை தாக்கப்பட்ட விவகாரத்தில் பிடிபட்டவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்து ஆலயங்கள் மீதும், விக்கிரகங்கள் மீதும் தாக்குதல் நடத்தியவர்களும்குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை பாஜக வரவேற்கிறது. ஆனால் இந்த நடவடிக்கைஉறுதியாக இருக்க வேண்டும். யாருக்கும் பாரபட்சம் காட்டாமல் அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு தனக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பை நழுவவிட்டு விட்டது. 142 அடி வரை நீரைத் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்படிஇருக்கும்போது அபரிமிதமான அளவுக்கு தண்ணீர் வந்தும் கூட ஷட்டர்களை இறக்கி விட்டு 142 அடி வரைதண்ணீரைத் தேக்கி வைக்க தமிழக அரசு முன்வராததற்கான காரணம் என்ன?

உச்சநீதிமன்ற தீர்ப்பு நமக்கு சாதகமாக உள்ளது. பொதுமக்களும் இந்தப் பிரச்சினையில் அரசுக்கு ஆதரவாகஉள்ளனர். அரசியல் கட்சிகளும் ஆதரவு தந்து கொண்டுள்ளன. அப்படி இருக்கையில் ஏன் அரசு அப்படி நடந்துகொள்ள முன்வரவில்லை?

மத்தியிலும் திமுக அங்கம் வகிக்கும் அரசுதான் உள்ளது. அப்படி இருக்கும்போது அரசியல் கட்டாயங்களுக்குதிமுக அரசு பணிந்தது ஏன்?

இந்தப் பிரச்சினையில் சட்டத்தை மதித்து கேரள அரசு நடந்து கொள்ளுமா என்பது சந்தேகம்தான். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசின் முயற்சிகளுக்கு பாஜக முழு ஆதரவு அளிக்கும்.

தெலுங்கு தேசம், சமாஜ்வாடி கட்சிகளை வைத்துக் கொண்டு 3வது அணி அமைக்க ஜெயலலிதா முயற்சிப்பதுபலன் தராது. காரணம் அந்தக் கட்சிகளுக்கு அவர்களது மாநிலங்களில் மட்டுமே செல்வாக்கு உள்ளது. எனவேஇந்த முயற்சி பலனளிக்காது, மாறாக மக்களுக்கு குழப்பமே மிஞ்சும்.

முஸ்லீம்களை கவரும் வகையிலான மத்திய அரசின் கொள்கையைக் கண்டித்து வருகிற 20ம் தேதி நாடு தழுவியஅளவில் நடைபெறும் போராட்டத்தை தமிழக பாஜக வெற்றிகரமாக நடத்தும்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினமான டிசம்பர் 25ம் தேதியை சேவை தினமாக தமிழக பாஜககொண்டாடும் என்றார் கணேசன்.

தை பிறந்தால் ராமர் கோவில்:

முன்னதாக சென்னையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கரின் நூற்றாண்டு பேசிய இல.கணேசன்,உச்சநீதிமன்றத் தீர்ப்பு எப்படி இருந்தாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் தை மாதம் பிறந்தவுடன் ராமர்கோவில் கட்டும் பணி தொடங்கப்படும் என்றார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, மனு சக்கரவர்த்தியின் வம்சத்தில், 65வது தலைமுறையில் வந்தவர்தான் ராமர்.அயோத்தியில் ராமர் கோவிலை நிச்சயம் கட்டுவோம். அந்த இடத்தில் ராமர் கோவிலை இடித்து விட்டுகட்டப்பட்ட மசூதியை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

மசூதி கட்டப்பட்ட இடத்தில் ராமர் கோவில் இருந்ததற்கான அனைத்து ஆதராங்களும் தெளிவாக உள்ளன.தசாவதார சிற்பங்கள் அங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல வரலாற்று ஆதாரங்களும்கிடைத்துள்ளன.

டிசம்பர் கடைசி வாரம் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் ராமர் கோவில் தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்றம்வழங்கக் கூடும். அந்தத் தீர்ப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப் படாமல், தை மாதம்பிறந்தவுடன் ராமர் கோவில் பணிகள் தொடங்கும்.

தீர்ப்பு சாதகமாக வந்து, அதை எதிர்க்கும் முயற்சிகளை நாங்கள் போராடி முறியடிப்போம் என்றார் இல.கணேசன்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X