For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லண்டனில் பாலசிங்கம் உடல் தகனம்

By Staff
Google Oneindia Tamil News

லண்டன்:மறைந்த விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்தின் உடல் இன்று லண்டனில்தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

People paying homage to Anton Balasingham

ஆண்டன் பாலசிங்கம் கடந்த வியாழக்கிழமை லண்டனில் உள்ள தனது இல்லத்தில் புற்று நோயால் காலமானார்.அவரது இறுதிச் சடங்குகள் இன்று லண்டனில் நடைபெற்றது. லண்டன் அலெக்சாண்ட்ரா அரண்மனை அரங்கில்அவரது உடல் இன்று காலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இங்கிலாந்தில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்துள்ள ஆயிரக்கணக்கானஇலங்கை தமிழர்கள் பாலசிங்கம் உடலுக்கு நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.

கிரேட் ஹால் அரங்கில் பாலசிங்கத்தின் உடல் அடங்கிய பெட்டி வைக்கப்பட்டிருந்தது. இலங்கைத் தமிழர்கள்குடும்பம் குடும்பமாக நீண்ட வரிசையில் காத்திருந்து பாலசிங்கத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.பலர் கண்ணீர் விட்டு அழுதபடி அஞ்சலி செலுத்தினர்.

லண்டனில் இறுதிச் சடங்குகள் நடந்த அதே நேரம் வவுனியாவிலும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தன. இந்தநிகழ்ச்சிகளை விடுதலைப் புலிகள் இயக்கம் தங்களது வானொலி மற்றும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளி,ஒலி பரப்பின.

பாலசிங்கத்தின் இறுதிச் சடங்கையொட்டி ஈழத்தில் இன்று துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தநிலையிலும் தமிழர் பகுதிகளில் இலங்கை விமானப் படை விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்திவருகின்றன.

ஆண்டனின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில், மதிமுக சார்பில் அக்கட்சியின் அரசியல் ஆய்வு மையச் செயலாளர்சபாபதி மோகன் கலந்து கொள்கிறார் என கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். மேலும்பாலசிங்கத்தின் மனைவி ஏடேலுக்கு ஆறுதல் தெரிவித்து வைகோ கடிதம் அனுப்பியுள்ளார்.

நார்வே நாட்டிலிருந்து பல்வேறு தனியார் விமானங்களில் தமிழர்கள் லண்டனில் குவிந்துள்ளனர். இதேபோலசுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் லண்டன்வந்திருந்தனர்.

கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும் பெரும் திரளான தமிழர்கள் கடந்த 2நாட்களாகவே லண்டனுக்கு வந்தவண்ணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

People paying homage to Anton Balasingham

திருமா. அஞ்சலி:

பாலசிங்கத்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் லண்டன் சென்றுள்ளார்.

பாலசிங்கத்தின் உடலுக்கு மரியாதை செலுத்திய திருமாவளவன், ஆண்டனின் மனைவி ஏடலை சந்தித்து ஆறுதல் கூறினார்.

கருணாநிதி-இலங்கை தமிழ் எம்பிக்கள் சந்திப்பு:

இந் நிலையில் இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்பிக்கள் இன்று முதல்வர் கருணாநிதியை அவரதுஇல்லத்தில் சந்தித்தனர்.

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், மாவை சேனாதிராஜா,செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரமேச்சந்திரன், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் ஆகியோர்கருணாநிதியை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது அவர்கள் ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு பயங்கரவாதத் செயல் குறித்துகருணாநிதியிடம் அவர்கள் விளக்கினர்.

23 சிறுவர்களை திருப்பி அனுப்பிய புலிகள்:

தங்கள் இயக்கத்தில் 23 சிறுவர்களை சேர்த்தவர்களை அமைப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாகவிடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது. தங்கள் இயக்கத்தில் சேர்ப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட 23பேரையும் விடுவித்து விட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.

வயதை சரிவர பரசோதிக்காமல் இந்த 23 பேரும் அழைத்துச் செல்லப்பட்டு விட்டதாகவும், ஆனால், பின்னர் இதுதெரிய வந்ததைத் தொடர்ந்து அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் புலிகள் விளக்கியுள்ளனர்.

இந்த 23 பேரும் பள்ளியில் படித்து வருபவர்கள் என கூறப்படுகிறது. சுனாமியால் பாதிக்கப்பட்ட அம்பாரைமாவட்டம் விநாயகபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இதுகுறித்து புலிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் கூறுகையில், அவர்களைபுலிகள் கடத்தி வந்தாக சிங்கள ராணுவம் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. அவர்கள் இயக்கத்தில்சேர்ப்பதற்காக அழைத்து வரப்பட்டனர். அவர்களை அழைத்து வருவதற்கு முன்பு வயதை சரிவரபரிசோதிக்காமல் விட்டு விட்டனர். இது மிகப் பெரிய தவறு. அந்தத் தவறை செய்தவர்கள் மீது நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.

அழைத்து வரப்பட்டவர்கள் மீண்டும் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டனர் என்றார்.

முதல் முறையாக தங்களது இயக்கத்தினர் மீது நடவடிக்கை எடுத்ததை பகிரங்கமாக புலிகள் அமைப்புதெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களுக்கு உணவு-மருந்து: நெடுமாறன்

இதற்கிடையே சேலத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,பட்டினியால் வாடி வரும் ஈழத் தமிழர்களுக்காக தமிழகத்திலிருந்து உணவு, மருந்துப் பொருட்களைத் திரட்டிஅனுப்ப முடிவு செய்துள்ளோம். இவை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் ஈழத்திற்கு அனுப்பப்படும்.

வருகிற 31ம் தேதிக்குள் இவற்றைத் திரட்டி அனுப்புமாறு அனைத்துக் கட்சியினர், தமிழர் அமைப்புகள், மனிதநேய இயக்கங்களை கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கை அரசுக்கு எந்தவிதமான ஆயுத உதவியையும் இந்தியா செய்யாது என சோனியா காந்தி கூறியுள்ளார்.நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மத்திய ஆளுங்கட்சியின் தலைவர் ஒருவரிடமிருந்து இவ்வாறு செய்திவந்திருப்பது பாராட்டுக்குரியது. இதேபோல ஈழத் தமிழர்களுக்காக தமிழக அரசும் அறிவிப்புவெளியிட்டுள்ளதை பாராட்டுகிறேன்.

முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக நடைப்பயணம் மேற்கொண்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர்வைகோவுக்கு எனது வாழ்த்துக்கள். உச்சநீதிமன்றத் தீர்ப்பை கேரள அரசு மதிக்கவில்லை. இது தவறானமுன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். எனவே உச்சநீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக மத்திய அரசு அமல்படுத்தமுன்வர வேண்டும்.

பெரியார் சிலை உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்தது தவறு. அதேசமயம், தனிப்பட்ட நபர்கள் மீதான தாக்குதல் தவறு. தனி நபர் மீதானதாக்குதலை பெரியார் ஒருபோதும் ஒப்புக் கொண்டதில்லை என்றார் நெடுமாறன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X