கேரளத்துக்கு ஆப்பு-சேலத்தில் புதிய கோட்டம்
டெல்லி:இதுவரை கேரள அதிகாரிகளின் கட்டுப்பாட்டில், பாலக்காடு கோட்டத்தில் இருந்து வந்த கோவை, ஊட்டி,ஈரோடு ஆகிய ரயில்வே பிரிவுகள் புதிதாக உருவாக்கப்படவுள்ள சேலம் ரயில்வே கோட்டத்தில்இணைக்கப்பட்டுள்ளன.
வெறும் 20 எம்பிக்கள் இருந்தாலும் கட்சி வேறுபாடு இல்லாமல் டெல்லியில் நெருக்கடி தந்து தங்களுக்குவேண்டியதை சாதித்துக் கொள்வதில் கில்லாடிகள் கேரள அரசியல்வாதிகள்.
பல ஆண்டுகளாக ரயில்வே திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வந்தது. இதனால்தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட பல ரயில்களைக் கூட மலையாளிகள் தட்டிப் பறித்தனர்.
ஆனால், மத்தியில் கூட்டணி ஆட்சிகள் அமைய ஆரம்பித்த பின்னரே நிலைமை மாறியது. கூட்டணிஆட்சிகளுக்கு ஆதரவு தந்த ஜெயலலிதாவும் சரி கருணாநிதியும் சரி தமிழக திட்டங்களுக்காக மத்தியஅரசுகளுக்கு நெருக்கடி தர தவறியதில்லை.
அதே போல பாமகவும் தனது எம்பிக்களில் யாரையாவது ஒருவரை தொடர்ந்து ரயில்வே இணையமைச்சராக்கிதமிழகத்துக்கு ஏகப்பட்ட திட்டங்களை அள்ளிக் கொண்டு வந்தது.
அந்த வகையில் தான் பாலக்காடு கோட்டம் என்ற பெயரில் தமிழகத்தின் முக்கியமான ரயில்வே பகுதிகளைதனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கொட்டம் அடித்து வந்த கேரளத்துக்கு ஆப்பு வைத்துள்ளார் ரயில்வேஇணையமைச்சரான பாமகவின் வேலு.
பாலக்காடு கோட்டத்தை பிரித்து சேலம் கோட்டத்தை உருவாக்கியுள்ள வேலு, அதில் கோவை உள்ளிட்ட சேர்க்கவழி செய்துள்ளார். இதற்கு வழக்கம் போலவே கேரள எம்பிக்கள் கூட்டாக டெல்லியில் எதிர்ப்பு தெரிவித்தனர்.சோனியா மூலமாக பிரஷ்ஷர் தர முயன்றனர்.
ஆனால், ரயில்வே அமைச்சர் லாலுவின் உதவியோடு அதையெல்லாம் வென்று பாலக்காடு கோட்டத்தை பிரிக்கவைத்துவிட்டார் வேலு.
இதன் மூலம் ரயில்வேயின் தமிழக பிரிவில் ஒரு பகுதியை கட்டுபடுத்தி வந்த கேரளத்திடம் இருந்து விடுதலைகிடைக்கவுள்ளது. தற்போது கோவை, ஊட்டி, உள்ளிட்ட பகுதிகளை சேலம் கோட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் இருந்து 135 கி.மீ தூர ரயில் தடம், சேலம் கோட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.சேலத்தில் ரயில்வே கோட்ட"ததுக்கான அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்க ரூ. 20 கோடி ஒதுக்கப்படவுள்ளது.முதல்கட்டமாக ரூ. 10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications