வைகுண்ட ஏகாதசி- திக் திக்கில் ஸ்ரீரங்கம்
சென்னை:பெரியார் சிலை விவகாரத்தை முன் வைத்து வைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீரங்கத்தில் பதட்ட நிலையை உருவாக்கமுயற்சி நடப்பதாக தேசிய இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது.
இதுகுறித்து தேசிய இந்து இயக்கங்களின் சார்பாக வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில்,
1973ம் ஆண்டே ஸ்ரீரங்கம் நகரமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகும் மக்கள் எதிர்ப்பின் காரணமாக மாநிலஅரசின் அனுமதி கிடைக்காததால், இதுவரை ஸ்ரீரங்கம் கோவில் முன் பெரியார் சிலை வைக்கப்படாமல்இருந்தது. இப்போது அந்த இடத்தில் சிலை வைப்பதை முதல்வர் கருணாநிதி தவிர்த்து இருக்கலாம்.
பெரியாரின் சிலை வைப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. அது வைக்கப்படும் இடம் பக்தர்கள் மனதைப்புண்படுத்துவதால் அதை நாங்கள் எதிர்க்கிறோம். சிலையை ஜனநாயகரீதியாக அப்புறப்படுத்த வேண்டும்என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
ஆனால் சிலையை சேதப்படுத்திய விதத்தை ஆதரிக்கவில்லை. ஸ்ரீரங்கம் ஆலயத்துக்கு எதிரே பெரியார் சிலைஇருக்கும் வரை அது மக்கள் மனதைப் புண்படுத்தி கொண்டு தான் இருக்கும். இந்த மாத இறுதியில் வைகுண்டஏகாதசி தினத்தில் ஸ்ரீரங்கத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அவர்களது வழிபாட்டுக்கு எந்தவிதகுந்தகம் இல்லாத வகையில் உரிய பாதுகாப்பு தரவேண்டியது அரசின் கடமையாகும் என்பதைவற்புறுத்துகிறோம்.
வைகுண்ட ஏகாதசி அன்று பதட்ட நிலை உருவாக்க சிலர் முயற்சிப்பதாகத் தெரியவந்துள்ளது. இதனால் ஏகாதசிதினத்தன்று பெரியாரின் சிலையை அவமதிக்க வேண்டும் என சிலர் அறைகூவல் விடுத்துள்தாகத் தெரிகிறது.
ஒருவரது சிலை அருகே துப்புவது கல் எறிவது என்பதெல்லாம் நமது பண்பாட்டுக்கு விரோதமானகாட்டுமிராண்டி செயல். இந்துகள் இத்தகைய செயலில் ஒரு போதும் ஈடுபடமாட்டார்கள். அத்தகைய செயலைநாங்கள் ஒருபோது அனுமதிக்க மாட்டோம்.
ஆனாலும் இதுபோன்ற செயல் மூலம் வைகுண்ட ஏகாதசியில் குழப்பம் உண்டாக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்.அதில் யாரும் சிக்கிவிடக் கூடாது என்று எச்சரிக்கிறோம் என அதில் கூறியிருக்கிறார்கள்.
வைகுண்ட ஏகாதசி அன்று பெரியார் சிலை மீது கல் எறியும் போரட்டம் நடத்தப்படும் என சில இந்துஅமைப்புகள் கூறியுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
கல் எறிதல் போன்ற சம்பவம் நடந்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என தி.க. உள்ளிட்டதிராவிட இயக்கங்கள் எச்சரித்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications