அர்ஜூன் சம்பத் ஒரு வழியாகக் கைது
பொள்ளாச்சி:ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை தகர்க்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இந்து மக்கள்கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தை போலீஸார் பொள்ளாச்சியில் கைது செய்தனர்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையின் தலை துண்டிக்கப்பட்டுசேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 4 பேரை போலீஸார் ஏற்கனவே குண்டர்தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத்தை போலீஸார் தேடி வந்தனர்.அவர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு ஏற்கனவே நிராகரிக்ப்பட்டு விட்டது.மேலும் அவருக்கு எதிராக பிடிவாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், கோவையில் ஒரு அச்சகத்தில் அர்ஜூன் சம்பத் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைக்கவே,போலீசார் அங்கு சென்றனர். ஆனால், அர்ஜூன் சம்பத்தின் புகைப்படத்தைக் கூட பார்த்திராத அந்த போலீசார்,அச்சகத்தில் நுழைந்து அங்கிருந்தவரிடம் அர்ஜூன் சம்பத் இருக்காரா என்று கேட்க, அவர் இல்லை என்றுசொன்னதையடுத்து திரும்பி வந்துவிட்டார்கள்.
இதில் பெரிய காமெடி என்னவென்றால், அர்ஜூன் சம்பத் குறித்து போலீசார் விசாரித்த நபர் வேறு யாருமல்ல,அர்ஜூன் சம்பத்தே தானாம்.
இவ்வாறு அவரை முதலில் நழுவ விட்ட போலீசார் பின்னர் தவறை உணர்ந்து அலெர்ட் ஆகிபொள்ளாச்சியில் வைத்து அவரை அமுக்கினர். தனது உறவினரான சிவக்குமார்என்பவரது வீட்டில் தங்கியிருந்த அர்ஜூன் சம்பத்தைக் கைது செய்தனர்.
பின்னர் கோவை மாவட்ட எஸ்.பி. முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தினர். அதன்பின்னர் திருச்சிக்கு அழைத்துச் சென்றனர். அர்ஜூன் சம்பத்தை விசாரித்து விட்டுநீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications