மனைவி-மக்களை புறக்கணிக்கும் மூலிகை ராமர்
ஸ்ரீவில்லிபுத்தூர்:மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை தன்னையும், தனது குழந்தைகளையும்கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருவதாக அவரது மனைவி ஜெயந்தி விருதுநகர்மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹருக்கு ஜெயந்தி அனுப்பியுள்ளபுகாரில் கூறியிருப்பதாவது:
எனது தாயாரின் உடன் பிறந்த சகோதரர்தான் எனது கணவர் ராமர் பிள்ளை. நான்தான்ராமர் பிள்ளையின் சட்டப்பூர்வமான, அதிகாரப்பூர்வமான மனைவி.
எனக்கு 24 வயதில் ஆதிலட்சுமி என்கிற மகளும், கோவிந்தராஜ் என்கிற 23 வயதுமகனும் உள்ளனர். ஆதிலட்சுமி திருமண வயதில் உள்ளார். கோவிந்தராஜ் இன்னும்கல்யாணம் ஆகவில்லை.
எனது கணவர் ராமர் பிள்ளை என்னையும், எனது குழந்தைகளையும் விட்டுப் பிரிந்துபல வருடமாகிறது. அவர் வந்து எங்களைப் பார்ப்பதில்லை. குடும்பத்துக்குப் பணம்கொடுப்பதில்லை. என்ன ஏது என்று கேட்பதில்லை.
எங்களை விட்டுப் பிரிந்து இடையர்குளத்தில் வசிக்கும் ராமையா மனைவி வேணுதேவி மற்றும் அவரின் மகளும், ஜெகதீஸ்வரன் என்பவரின் மனைவியுமானபூங்கனியுடன் வசித்து வருகிறார்.
மருத்துவ செலவு, சாப்பாடு, துணிமணி என எதற்கும் அவர் எங்களுக்குஉதவுவதில்லை. நானும் எனது குழந்தைகளும் எனது தாயார் கோவிந்தம்மாவின்வீட்டை அடகுக்கு வைத்த பணத்தில்தான் பிழைப்பு நடத்தி வருகிறோம்.
தற்போது மத்திய அரசு ராமர் பிள்ளையின் கண்டுபிடிப்புக்கு பணம் கொடுக்கப்போவதாக கூறப்படுகிறது. எனவே அந்தப் பணத்திலிருந்து எங்களுக்கும், எனதுகுழந்தைகளின் திருமண செலவுகளுக்கும் உரிய பணத்தை எனது கணவர் வழங்கஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் எனது கணவர் என்னுடன் வந்து வாழவும் உதவி புரிய வேண்டும் எனகோரியுள்ளார் ஜெயந்தி.
சமீபத்தில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு ராமர் பிள்ளை எழுதிய கடிதத்தில் ஜனவரி1ம் தேதிக்குள் எனது கண்டுபிடிப்பை அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால்தீக்குளித்து சாவேன் என ராமர் மிரட்டியிருந்தது நினைவிருக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications