கிரிக்கெட்-குழப்பியெடுத்த வீரர்கள், நடுவர்கள்

Subscribe to Oneindia Tamil

கேப்டவுன்:கேப்டவுன் நகரில் தென் ஆப்பிரிக்காவுடனான 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின்4வது நாள் ஆட்டமான நேற்று பல குழப்பங்களும், தவறுகளும் நடந்தேறின.

கேப்டவுன் நகரில் இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3வதுடெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா அபாரமாகஆடி 416 ரன்களை குவித்தது. ஆனால் தென் ஆப்பிரிக்க வீரர்கள் முதல் இன்னிங்ஸில்இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிறப்பாக ஆடி 375 ரன்களைக்குவித்தனர்.

இதனால் சொற்ப ரன் முன்னிலையில் இந்தியா தனது 2வது இன்னிங்ஸைத்தொடங்கியது. 4வது நாளான நேற்று இந்திய அதிரடியாக ஆடி அதிக ரன்களைக்குவித்து தென் ஆப்பிரிக்காவுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் எனஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணியின் வீரர்கள் படு சொதப்பலாக ஆடினர்.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸை 169 ரன்களுக்குஇழந்தது. டிராவிட் 47 ரன்களும், கங்குலி 46 ரன்களும், தினேஷ் கார்த்திக்ஆட்டமிழக்காமல் 38 ரன்களும் சேர்த்தனர்.

இந்திய அணி விளையாடியபோது பல குழப்பங்கள் நடந்தன. முதல் குழப்பம்டெண்டுல்கர் ரூபத்தில் வந்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களானவாசிம் ஜாபரும், வீரேந்திர ஷேவாக்கும் ஆட்டம் தொடங்கிய 12 நிமிடங்களிலேயேஆட்டமிழந்தனர்.

அடுத்த பேட்ஸ்மேனாக டெண்டுல்கர் களமிறங்க வேண்டும். ஆனால்நெடுநேரமாகியும் டெண்டுல்கர் வரவில்லை. இதனால் பெரும் குழப்பம் நிலவியது.திடீரென டெண்டுல்கருக்குப் பதில் கங்குலி பேட்டுடன் உள்ளே வந்துகொண்டிருந்தார்.

இதற்கு தென் ஆப்பிரிக்க வீரர்களும், நடுவர்களும் ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால்டெண்டுல்கர் வராததற்கு ஒரு டெக்னிக்கல் குழப்பமே காரணம் என பின்னர் தெரியவந்தது.

அதாவது 3வது நாள் ஆட்டத்தின்போது டெண்டுல்கர் பீல்டிங்கில் இல்லாத நேரத்தைக்கணக்கிட்டு, நேற்றைய ஆட்டத்தின்போது அவர் காலை (தென் ஆப்பிரிக்க நேரப்படி)10.48 மணிக்குத்தான் களம் இறங்க வேண்டும் என நான்காவது நடுவரான முர்ரேபிரவுன் கூறியிருந்தார்.

ஆனால் நேற்று காலை ஆட்டம் தொடங்கிய 12 நிமிடங்களில் ஜாபரும், ஷேவாக்கும்அவுட் ஆகி விட்டனர். வாசிம் அவுட் ஆனபோது காலை மணி 10.43. ஆனால்10.48க்குத்தான் செல்ல முடியும் என்பதால் டெண்டுல்கர் வரவில்லை. அவருக்குப்பதில் கங்குலி வந்தார்.

இதை தெரிந்து கொண்ட நடுவர் டேரைல் ஹார்ப்பர், தென் ஆப்பிரிக்க கேப்டன்ஸ்மித்திடம் விளக்கினார். இதை ஸ்மித்தும் ஏற்றுக் கொண்டார். ஆனால் ஸ்மித்நினைத்திருந்தால் டெண்டுல்கரை நேற்று ஆடவே விடாமல் அவுட் செய்திருக்கமுடியும்.

எப்படி என்றால் கிரிக்கெட் விதிமுறைப்படி ஒரு வீரர் ஆட்டமிழந்த 3நிமிடங்களுக்குள் அடுத்த வீரர் களத்தில் இறங்கி விட வேண்டும். அப்படிஇல்லாவிட்டால் அந்த வீரர் தொழில்நுட்பரீதியாக ஆட்டமிழந்தவராகஅறிவிக்கப்படுவார். ஆனால் இதை எதிரணி வீரர்கள் வலியுறுத்தினால்தான் நடுவரால்செய்ய முடியும்.

ஆனால் நேற்று ஸ்மித் பெருந்தன்மையாக அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால் டெண்டுல்கர் தப்பினார்.

2வது குழப்பம்:

பந்து வீச்சாளர் ஸ்டெய்ன் பந்து வீசிக் கொண்டிருந்தார். இன்னும் எத்தனை பந்துகளைஅவர் வீச வேண்டும் என களத்தில் இருந்த நடுவர் ஆசாத் ராஃப், மூன்றாவதுநடுவரிடம் கேட்டார். அதற்கு மூன்றாவது நடுவர் இன்னும் ஒரு பந்து வீச வேண்டும்என்றார். ஆனால் ஸ்டெய்ன் 6 பந்துகளையும் வீசி முடித்து விட்டார்.

ஆனால் அதை அறியாத ராஃப் இன்னும் ஒரு பந்து வீச வேண்டும் என ஸ்டெய்னிடம்கூறியதால் அவரும் வீசினார். அந்தோ பரிதாபம்! அந்த பந்தை சந்தித்த முனாப்படேல், அதை தூக்கி அடிக்க அது தென் ஆப்பிரிக்க பீல்டரின் கையில்தஞ்சமடையவே, இந்தியா ஆல் அவுட் ஆனது.

மறு முனையில் ஆட்டமிழக்காமல், அமர்க்களமாக ஆடிக் கொண்டிருந்த தினேஷ்கார்த்திக் வெறுத்துப் போய், படேலுடன் பெவிலியன் திரும்பினார்.

3வது குழப்பம்:

டெண்டுல்கர் ஆடிக் கொண்டிருந்தபோது அவரது லெக் சைடில் பந்து வேகமாகசென்றது. ஆனால் நடுவர் அதை எல்.பி.டபிள்யூ என்று கூறியதால் டெண்டுல்கர்அவுட் ஆக்கப்பட்டார். இந்த அவுட்டும் சர்ச்சையைக் கிளப்பியது.

மொத்தத்தில் 4வது நாள் ஆட்டம் படு குழப்பமாக இருந்தது. அதை படு சொதப்பலாகஇருந்தது இந்தியாவின் பேட்டிங். 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதானஇலக்கை இந்தியா, தென் ஆப்பி>க்காவுக்கு நிர்ணயித்துள்ளது.

நேற்றே தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பி>க்கா ஆட்ட நேரமுடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்களை சேர்த்தது. இன்று ஒரு நாள் ஆட்டம்பாக்கி உள்ளது. மேலும் 8 விக்கெட்டுகள் கையில் இருப்பதால் வெற்றிக்குத்தேவையான 156 ரன்களை எடுத்து தொடரை வெல்ல தென் ஆப்பி>க்க வீரர்கள் இன்றுமுயல்வார்கள்.

முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடியும், 2வது இன்னிங்ஸில் சொதப்பியதால் இந்தியஅணி தொடரை இழக்கும் அபாயம் ஏற்பட்டு விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+