கூட்டணியில் போட்டி மதிமுக- திமுக ஒப்புதல்
சென்னை:எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் தலைமையிலான மதிமுக விரும்பினால் திமுக கூட்டணியில் இணையலாம்என திமுக உயர் மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக உயர் மட்ட செயல்திட்டக் குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில்,
இன்றைய கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய தீர்மானமாக நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வகைசெய்யும் சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பிப்ரவரி 10ம் தேதி சென்னை மற்றும்மாவட்டத் தலைநகரங்களில் திமுக மகளிர் அணி சார்பில் பேரணிகள் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நதிகளை தேசியமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்கு முதல் கட்டமாக தென்னக நதிகளைஇணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இந்தஆண்டே அமல்படுத்த தேவையான ஆணையை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என்று கோரி ஒரு தீர்மானம்.இந்த இட ஒதுக்கீடு தனியார் நிறுவனங்களிலும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்குக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தை அணுகும் முயற்சிகளை எடுக்க இன்னொருதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர நல்வாழ்வு ஏற்பட அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் தலைமையிலான மதிமுக விரும்பினால் திமுக கூட்டணியில் ஒரு கட்சியாகஇடம் பெறலாம் எனவும் இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications