ஈராக் போர்: புஷ்ஷுக்கு எம்.பிக்கள் எச்சரிக்கை
வாஷிங்டன்:ஈராக் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய நேரம் வந்து விட்டது. உடனடியாக அங்கு நிறுத்தப்பட்டுள்ளஅமெரிக்க படைகளை வாபஸ் பெற வேண்டும், இல்லாவிட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்றுஅதிபர் ஜார்ஜ் புஷ்ஷை அமெரிக்க ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஈராக்கில் போர் தொடுத்ததன் மூலம் ஈராக்கில் மட்டுமல்லாது அமெரிக்காவிலும் கடும் எதிர்ப்பை சம்பாதித்துவிட்டார் புஷ். சமீபத்தில் அங்கு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புஷ் கட்சிக்கு பெரும் அடி விழுந்தது.
இதையடுத்து தனது ஈராக் கொள்கையை அவர் மறு பரிசீலனை செய்ய வேண்டிய கட்டயாம் எழுந்தது. இன்னும்சில நாட்களில் ஈராக் குறித்த அமெரிக்காவின் புதிய உத்திகளை புஷ் அறிவிக்கவுள்ளார்.
இந்த நிலையில் உடனடியாக ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெற வேண்டும் என் ஜனநாயகக்கட்சி தலைவர்கள் புஷ்ஷை எச்சரித்துள்ளனர்.
நாடாளுமன்ற செனட் சபைக்கான ஜனநாயகக் கட்சித் தலைவர் ஹாரி ரீட், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரானநான்சி பெலோசியும் இதுதொடர்பாக புஷ்ஷுக்கு அறிவுரை கலந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக இருவரும் புஷ்ஷுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஈராக் போர் ஆரம்பித்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இதில் உயிரிழந்துள்ளனர். 300 பில்லியன் டாலருக்கு மேல் பணவிரயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு மேலும் போரில் ஈடுபடாமல் படைகளை வாபஸ் பெறுவதே சிறந்தது.
மேலும் மேலும் அங்கு படைகளைக் குவிக்க முயன்றால் அது கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும்.உங்களுடைய ஈராக் கொள்கை தவறானது என்பதை நவம்பரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள்தெளிவாக கூறி விட்டனர்.
நமது படைகளின் நலனைக் கருதி உடனடியாக ஈராக்கிலிருந்து அமெரிக்கா விலக உத்தரவிடுங்கள். கூடுதல்படைகளை அனுப்பி பலமுறை நீங்கள் தோற்றுள்ளீர்கள். இந்த முறையும் அந்தத் தவறைச் செய்ய வேண்டாம்.
கூடுதல் படைகளை அனுப்பினால் கூடுதல் அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பார்கள். வெற்றி என்பது நிச்சயமற்றஒன்றாக இருக்கிறது என்று இருவரும் கூறியுள்ளனர்.
ஈராக்குக்கு கூடுதல் படைகளை அனுப்ப ஜனநாயகக் கட்சி ஒத்துக் கொள்ளாது என்று கூறப்படுகிறது. எனவேஇதுதொடர்பான புஷ்ஷின் முடிவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைப்பது சிரமம் என்றுகூறப்படுகிறதுமு நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியேபெரும்பான்மையாக உள்ளது என்பது நினைவிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications