இந்தியா தோல்வி: தொடரை வென்றது தெ.ஆ.

Subscribe to Oneindia Tamil

கேப்டவுன்:கேப்டவுனில் நடந்த 3வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையிலான முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா முதல்போட்டியிலும், 2வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வென்று சம நிலையில் இருந்தன.

இந்த நிலையில் கேப்டவுனில் 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நடந்து வந்தது. இதை யார் வென்றாலும்தொடர் அவர்களுக்குத்தான் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 414 ரன்களை எடுத்தது. வாசிம் ஜாபர் சதமடித்தார்.தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு பதிலடி தரும் விதமாகசிறப்பாக ஆடி 375 ரன்களைக் குவித்தது.

இதனால் ஆட்டம் யாருக்கும் சாதகமாகக் கூடும் என்ற நிலை ஏற்பட்டது. இந்திய அணி தனது இரண்டாவதுஇன்னிங்ஸை படு சொதப்பலாக ஆடியது. இதனால் 169 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கு கிடைத்ததால் தென் ஆப்பிரிக்க அணி பெரும் நிம்மதிஅடைந்தது. இதையடுத்து அந்த அணி 2வது இன்னிங்ஸை நம்பிக்கையுடன் தொடங்கியது.

4வது நாள் ஆட்ட இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று5வது நாள் ஆட்டம் தொடங்கியது.

கேப்டன் ஸ்மித் தொடர்ந்து சிறப்பாக ஆடி 55 ரன்களை எடுத்தார். அவருக்குப் பின் வந்த பொலாக், கல்லிஸ்ஆகியோரும் அருமையாக ஆடி நிதானமாக வெற்றி இலக்கை நோக்கி நடை போட்டனர்.

111 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர்மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அதன் பின்னர் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் விழுந்ததால், இந்திய அணிக்குகொஞ்சம் நம்பிக்கை பிறந்தது.

ஆனால் பொலாக்கும், பிரின்ஸும் அந்த நம்பிக்கையை தகர்க்கும் வகையில் நிதானமாக ஆடி மெதுவாகரன்களை சேர்க்க ஆரம்பித்தனர். பொலாக் 37 ரன்கள் எடுத்தார். கல்லிஸ் 32 ரன்கள் சேர்த்தார்.

பிரின்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 38 ரன்களை சேர்த்தார். இறுதியில், 64.1 ஓவர்களில் வெற்றிக்குத்தேவையான 211 ரன்களை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் தொடரையும் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக தென் ஆப்பிரிக்க கேப்டன் கிரீம்ஸ்மித்தும், தொடர் நாயகனாக ஷான் பொலாக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.

பேட்டிங் கவிழ்த்து விட்டது: டிராவிட்

இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பேட்டிங்தான் முக்கியக் காரணம் என்று கேப்டன் ராகுல் டிராவிட்கூறினார்.

ஆட்ட முடிவில் அவர் பேசுகையில், 2வது இன்னிங்ஸில் 70 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். அதுவேஇப்போதைய தோல்விக்கு முக்கியக் காரணம்.

தொடரை நாங்கள் இழந்திருந்தாலும் கடைசி 3 டெஸ்ட் தொடர்களிலேயே இதுதான் சிறந்ததாக அமைந்தது.இந்த போட்டியில் முதல் மூன்று நாட்களிலும் நமது அணியே ஆதிக்கம் செலுத்தி வந்தது.

ஸ்மித் சிறப்பாக ஆடி அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார். சிறப்பாக போராடி இந்த வெற்றியை அவர்கள்பெற்றுள்ளனர். அதற்கு அவர்கள் தகுதியானவர்களும் கூட என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+