மனித வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி
கொழும்பு:இலங்கையில் சிங்களர் பகுதியில் சனிக்கிழமை நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 15 பேருந்து பயணிகள்இறந்தனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு-கண்டி சாலையில், பஸ்சில் வெடிகுண்டு வெடித்ததில் 6 பயணிகள்பலியாயினர். இந்த நிலையில் சனிக்கிழமை பிற்பகல் மீண்டும் ஒரு பயங்கர வெடிகுண்டுச் சம்பவம் நடந்துள்ளது.
இலங்கையின் தெற்கில் உள்ள அம்பலங்கொடா மாவட்டம், ஹிக்கடுவா அருகே உள்ள மித்தியகோடா என்றஇடத்தில் கொழும்பிலிருந்து மாத்தரைக்கு ஒரு பேருந்து போய்க் கொண்டிருந்தது.
சனிக்கிழமை பிற்பகல் காலே சாலையில் அந்தப் பேருந்து போய்க் கொண்டிருந்தபோது பலத்த சப்தத்துடன்வெடிகுண்டு வெடித்தது. இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 40 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறுகையில், காயமடைந்தவர்களில் பலரும்ஆபத்தான நிலையில் உள்ளனர். அனைவரும் கரபிடியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பெண் மனித வெடிகுண்டு மூலமாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும் இன்னும் அது உறுதிசெய்யப்படவில்லை.
வெடித்த குண்டு மிகவும் சக்தி வாய்ந்தது. விடுதலைப் புலிகள் இதன் பின்னணியில் இருப்பதாகசந்தேகப்படுகிறோம் என்றார் அவர்.
கண்ணிவெடிக்கு 5 பேர் பலி:
இதற்கிடையே, வட கிழக்கில் நடந்த 3 தனித் தனி சம்பவங்களில் விடுதலைப் புலிகளின் கண்ணி வெடியில் சிக்கி4 ராணுவ வீரர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
மன்னார்-மடவச்சியா சாலையில் பட்டங்குளம் என்ற இடத்தில் கண்ணி வெடியில் சிக்கி 3 ராணுவ வீரர்கள்உள்பட 4 பேர் பலியாயினர். வடக்கு யாழ்ப்பாணத்தில், உடுவில் என்ற இடத்தில் கண்ணி வெடியில் சிக்கி ஒருவீரர் கொல்லப்பட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications