தமிழக போலீஸ் திமுகவின் கூலிப் படை: வைகோ
சென்னை:திமுக அரசின் கூலிப் படை போல தமிழக காவல்துறை செயல்படுவதாக மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுக அரசின் ஏஜென்டு போல தமிழக காவல்துறை செயல்பட்டு வருகிறது.வேம்பக்கோட்டை கிழக்கு பஞ்சாயத்தைச் சேர்ந்த முனியசாமி மீது, திமுகவின்தூண்டுதலின் பேரில் போலீஸார் பொய் வழக்குப் புனைந்துள்ளனர்.
சென்னையில் வருகிற 10ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் அவர்கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காக இவ்வாறு பொய் வழக்குப் போட்டுள்ளனர்.
இதேபோல விஜயகரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி மீது ஆற்றில்சட்டவிரோதமாக மண் அள்ளியதாக கூறி பொய் வழக்குப் போட திட்டமிட்டனர்.ஆனால் கிராம மக்கள் மற்றும் விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்தமுயற்சி பலிக்காமல் போய் விட்டது.
முனியசாமி எந்தக் குற்றமும் செய்யவில்லை. ஆனாலும் அவரைக் கைது செய்துகாவலில் வைத்துள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது. திமுக அரசு ஆட்சிப்பொறுப்புக்கு வந்தது முதலே திமுகவின் கூலிப் படை மாறி விட்டது தமிழக அரசு.
குறிப்பாக சென்னை போலீஸார், உள்ளாட்சித் தேர்தலின்போது செயல்பட்ட விதம்,மதிமுகவினர் மீது போட்ட பொய் வழக்குகள் சிறந்த சான்றுகளாகும்.
இதை நன்கு உணர்ந்த காரணத்தினால்தான் சமீபத்தில் சென்னை வந்திருந்த குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், போலீஸார் பாரபட்சமின்றி, நியாயமாக நடந்து கொள்ளவேண்டும் என அறிவுரை கூறி விட்டுச் சென்றார்.
தமிழக காவல்துறை தொடர்ந்து திமுகவின் ஏஜென்டாக செயல்பட்டு வந்தால்,மக்களிடையே அதன் மீதான நம்பகத் தன்மை போய் விடும். தமிழகத்திற்கும்பேராபத்தாக மாறி விடும் என்று கூறியுள்ளார் வைகோ.
பேரம் பேசிய எல்.ஜி, செஞ்சி: மதிமுக எம்.பி
இதற்கிடையில் தன்னை கட்சி தாவ வற்புறுத்தி எல்.கணேசனும், செஞ்சிராமச்சந்திரனும் பேரம் பேசினார்கள் என்று மதிமுக எம்.பி. கிருஷ்ணன் கூறியுள்ளார்.பொள்ளாச்சியில் மதிமுக செயல்வீரர் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டமதிமுக கிருஷ்ணன் எம்.பி பேசுகையில்,
எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் கட்சி மாறிவிட்டார்கள். நீங்கள் ஏன்மாறவில்லை என்று என்னிடம் கேட்கிறார்கள். நான் ஏன் மாற வேண்டும்?
பொள்ளாச்சி தொகுதியில் இரண்டு முறை எனக்கு சீட் கொடுத்து என்னை வெற்றிபெற வைத்த வைகோவை விட்டு நான் ஏன் போக வேண்டும்? வைகோ காலடியில்இருப்பேனே தவிர கோடிக்களுக்கு ஆசைப்பட்டு யார் பின்னாலும் போக மாட்டேன்.
கடந்த நாடாளுமன்ற கூட்டம் முடிந்ததும் செஞ்சி ராமச்சந்திரன் என்னை அழைத்துசென்றார். தனி அறையில் உட்கார வைத்து ஒரு மணி நேரம் அவரும், கணேசனும்பேசினார்கள். அப்போது வைகோவை பற்றி தவறாக பேசினார்கள். நான் எதற்கும் பிடிகொடுக்காமல் நழுவினேன்.
அதன் பிறகும் என்னுடன் 3 மணி நேரம் பேசினார்கள். அப்போது மதிமுக என்னும்கப்பலில் ஓட்டை விழுந்து விட்டது. எல்லோரும் சிதறி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.இங்கிருந்தால் மாலுமியுடன் சேர்ந்து நாமும் மடிந்து விடுவோம். நாங்கள் திமுகவுக்குபோக முடிவு செய்து விட்டோம். நாம் சேர்ந்து ஓட்டை விழுந்த கப்பலை கவிழ்த்துவிடலாம். உங்களுக்கு 15 கோடி ரூபாய் வீடு தேடி வரும் என்றார்கள்.
நீங்கள் கொடுக்கும் கோடி எனக்கு மூன்று ஐந்து பைசாவுக்கு சமம். நான் என்றும்வைகோவை ஏமாற்ற மாட்டேன் என கூறிவிட்டேன். கட்சிக்கு துரோகம்இழைத்தவர்களைப் பற்றி இனி பேசி பயனில்லை.
காலத்தை வீணடிக்காமல் கட்சியை நாம் வளர்க்க வேண்டும். நான் எப்போதும்வைகோ பக்கம் தான். வைகோவை நம்பி இயக்கத்தில் இருக்கிறேன். இருந்தாலும்,வீழ்ந்தாலும் அவரோடு தான். பதிவியை நம்பி நான் இல்லை. தொண்டனாகஇருக்கவே விருப்புகிறேன் என்றார் கிருஷ்ணன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications